நினைவுகளில்
ஆட்டி வைக்கிறாய்
ஒரு பக்கம்.
அடுத்த பக்கம்
செயல்கள் குவிந்திருக்க.
காவியம்
கனவுகளில் ஓவியம்
வரைவதே ஆனந்தம்.
நினைவுகளில் முடிந்தால்
வாழ்க்கையே பேரின்பம்.
விளையாட்டு
ஜெயித்தும்
மகிழ்ச்சியில்லை.
குழந்தையிடம்
தோற்கத் தெரியாமல்.
அவள்
கலங்கி நிற்பதை பார்க்கையிலே
மனத்தை ஏதோ பிசைகிறது
உயிரை அசைத்து பார்கிறது.
No comments:
Post a Comment