புதிதான வாழ்க்கையில்
இனிதான நாளிது.
புதிரான கேள்விகள்
தினந்தோறும் தோன்றினாலும்
புதுமையான விடைகளும்
தொடர்ந்தது கிடைக்குமே.
புடம் போட்ட தங்கமாய்
மிளிர வேண்டுமென்றும் நீ.
புன்னகையோடு வாழ்த்தினோம்
சிறப்பாக வளரவே.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஆசிகளுடன் பேரனே.
No comments:
Post a Comment