சுவைக்கூட்டும் மணம்
கூட்டும்
நினைவு செய்திகளை
நீ தந்த மொழியாலே
முடைக்கிறேன் தொகுப்பாக
வழங்கிடவே.
சாரமோ தோரணமோ
தடிக்கிடும்
கிடைக்கயிறோ
முடிச்சிட்டு
பார்கின்றேன்
முனைகளை இழுத்து
வைத்து.
அடுக்களையில்
அஞ்சறைப்பெட்டியென
பலப்பொருளுடன்
ஒன்றிருக்க - அதை வைத்து
விருப்பமுடன்
முனைகின்றேன்
விருந்தாக படைத்திடவே.தாமதமான ஸ்ரீ சரஸ்வதி பூஜா நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.
No comments:
Post a Comment