Translate

Tuesday, August 9, 2016

கோவிந்தாவென



மக்களிடம் நன்கு அறிமுகமான ஒரு பிரபலமானவர், தனது பிறந்தநாளை முன்னிட்டு
நேற்று தின---- நாளிதழ் மூலமாக ரசிகர்கள், வாசகர்கள் வாழ்த்துகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது, இலட்சக்கணக்கானவர்கள் வாழ்த்துகளை அனுப்பியிருந்தனர், நாளிதழின் ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்த்துகள் நேற்றைய நாளிதழில் வெளியிடப்பட்டிருந்தது,

அதில் ஒரு வாசகரின் வாழ்த்தில் ' கோவிந்தாவென வாழ்க்கை' என்ற சொற்றொடரை வாசித்ததுமே கோபத்தின் உச்சியை அடைந்தவராய், 'கோவிந்தாவென போகவேண்டுமா என் வாழ்க்கை' என  நாளிதழை நார்நாராக கிழித்தவாராய் எழுதிய வாசகரையும், வெளியிட தேர்ந்தெடுத்த ஆசிரியரையும் அர்சனை செய்தபடி நாளிதழ் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு விழா நிகழ்சசிகைகளை புறக்கணித்து சென்று விட்டார்,

இது குறித்து நமது நிருபர் அந்த வாசகரை தொடர்பு கொண்டபோது, அவர் ''என் வாழ்த்தினை புரிந்து கொள்ளாதது துரதிஸ்டமே'',
' கோவிந்தாவென வாழ்க்கை
கோபுரமாய் உயரட்டும்'
திருப்பதி ஏழுமையான் செல்வ நிலை, தினசரி திருவிழா நிலைப்போல் வாழ்க்கை அமைய வேண்டுமென வாழ்த்தியிருக்கிறேன் பல இனிய அழகிய தமிழ் சொற்கள்  
அதற்குரிய பொருளிழந்து பொழிவற்று போய் விட்டன. அதற்கு உதாரணமாக ஒரு வார்த்தை  " உல்லாசமாய் இருந்தனர் " ஒரு குழு அல்லது இருவராவது தங்கள் நினைவுகள், நிகழ்வுகளை கதைத்தப்படி, விளையாடியபடி இருப்பது தான் சரியான விளக்கம். ஆனால் இன்றைய நிலை கள்ள காதலர்களுக்கும், தீயவழிகளில் பொருள் களவாடி, அதை நிதானமின்றி செலவழித்து பிடிபடும்போது 'உல்லாசமாக இருந்தார்கள் ' என இயம்பும் நிலையாகி விட்டது.
என் வாழ்த்தை வெளியிட்டமைக்கும், சர்ச்சைக்குரிய நிலைக்கு விளக்கம் கேட்டமைக்கும் தின--- நாளிதழுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என வாசகரும் வாழ்த்தின் படைப்பாளியுமான தவப்புதல்வன் என்கின்ற
A.M.பத்ரி நாராயணன் பேட்டியளித்தார்

No comments: