உயிர் காக்கும் உழவர்
காணாத மழைதனையே
கனமாக கண்டு விட்டால்,
களைப்புகளும் கலைந்து போக,
கவலைகளும் மறைந்து ஓட,
கரைந்தோடும் மகிழ்வுடனே
கட்டியணைத்து கூத்தாடி,
புத்துணர்ச்சி ஊற்றெடுக்க,
புரண்டோடும் நீரினிலே,
பூசிக் கொண்ட சேறுடனே,
புழுதி பறக்க வழியின்றி,
புறப்படுமே படையாக,
புவி வாழ, உழவு தொடங்க.
# உழவர் திருநாளுக்கு மட்டுமா?
உட்கொள்ளும் ஒவ்வொரு நேரத்திற்கும்.
தவப்புதல்வன்.
No comments:
Post a Comment