வழி உண்டோ?
திரும்பியதே சொற்கள், தீபிழம்பாக ,
விரைந்ததே கைகள், வாயை அடைத்து வைக்க,
மூடியதே விழியிரண்டும் தன்னிச்சையாக,
துடித்ததே செவியிரண்டும் புதைந்துக் கொள்ள,
பூட்டிக் கொண்டதே மனம் இறுக்கமாக.
வழி ஏதேனும் உண்டோ
புதிதாய் இரணம் அடையாமல்.
No comments:
Post a Comment