Translate

Thursday, July 5, 2018

முகவரி தேடும் முழுமதி








#முகவரி தேடும் முழுமதி

செல்லும் இடமெல்லாம் ஒன்றேதான்.
இல்லையென்ற சொல்லேதான்.
தேடாத இடமுமில்லை.
தேடிப்பார்க்க முகவரியில்லை.
தொலைந்தவனாய் அவனிருக்க,
தொலைத்த முழுமதியாய் நான்.

கொஞ்சி குலாவிய காலம் குறைவோ?
அனைத்தையும் மறைத்த பேரழகு எதுவோ?
நூலிழையாய் இழைந்தது காதலில் நெஞ்சம்.
கற்பாறையாய் கனக்கிறது, நினைவில் மிச்சம்.
அவனின் முகவரி, இன்று எனக்கானதில்லை.
முகவரி தேடும் முழுமதியாய் நான்.

வானம் எனக்கு அரை கோளமாய் தெரிய,
ஆட்கொள்ள விட்டேன் திசைகளை மறந்து.
அன்றிருந்த நிலையால்
நினைவுக்கு வரவில்லை
அதைத்தவிர எதுவும்
இன்றும் எனக்கு .

அறுபட்ட பட்டமாய் அலைகிறேன்,
தொலைத்த முகவரியைத் தேடித்தான்.
அவனது முகவரி இனியேனும் கிடைக்குமோ?
எனக்கான முகவரியாய் என்றேனும் ஆகுமோ?
தேடி அலையும் முழுமதி
நான்
நிறைமதி ஆவேனோ?

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏





No comments: