யாமிருக்க பயமென்ன ?
+++++++++++++++++++++
பிறந்தப் பொழுது முழுதாய் பிறந்தேன்
வளர்கின்ற நேரம் செழுமையுடன் வளர்ந்தேன்.
இடையிலேனோ ஒன்றைப் பறித்துக் கொண்டான்.
மனமோ இருள, முடங்கிப் போனேன்.
ஊன்றுகோல் எனக்கு துணையாகிப் போக,
வாழ்வின் நிதர்சனங்கள் கற்றுத் தந்தது.
தடைகளுடனான பாதை வாழ்க்கை என்றானது.
கடக்கிறேன் துணிவுடன் நித்தமும் நான்.

தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.

#நண்பர்கள்_எனக்கு_தூண்டுக்கோலாய்_இருக்க,
+++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment