Translate

Thursday, April 26, 2018

பெண்மையின் உயர்வு






பாட்டிக்காடெனும் சிற்றூரெனினும்
பட்டனமெனும் பேரூரெனினும்
பகலென்றும் இரவென்றும்
பரபரக்கும் கைகளது. -கை
பத்தாதே பத்தெனினும்
பக்குவமாய் பணி முடிக்க. 14

பாவையாய் இருந்தவளோ
பாசமிகு தாயாகி,
பம்பரமாய் சுழன்றோடி,
பந்தி வைக்கும் சுவையாக.

பசி நெருங்கும் முன்னாடி.
பச்சிளங்குழந்தைக்கு பாலூட்டி,
பாசமலர் மகளுக்கு
பின்னலிட்டு பூச் சூடி, 33

பரிசமிட்ட மன்னனுக்கு
பாந்தமுடன் பறிமாறி,
பசி கிள்ளும் வயிற்றுக்கு
பானை நீர் சிறுதூற்றி,
பதட்டமின்றி
நெற்றி வியர்வையை ஒற்றி எடுத்து,
பற்றற்ற ஞானி போல்
பறக்கமிந்த பெண் தெய்வம். 44

பகுத்தறியா சில மூடர்களால்
படும் துன்பம் தாளாதே.
பற்றிக் படர்ந்த துளிர்களுக்காய்
பாழுதுபட்ட வாழ்வை உள்மறைத்து,
பனிநீராய் கரைந்திடுவாள்,
குடும்பத்தில் சிறு துன்பம் தோன்றிடினும். 62

பகட்டாய் உரைத்திடுவார்
பெண்ணினம் தெய்வமென்று.
வேறு சிலரோ .நிந்திப்பார்
பக்க விளைவை கருதாமல். 72



ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏




#தெய்வம் என்பது தூய தமிழ்ச் சொல்லே

No comments: