Translate

Friday, April 13, 2018

கண்மணியே!




கற்றதெல்லாம் கைக்கூட
கண்டதெல்லாம் நிசமாக.
காண்பதெல்லாம் உவப்பாக.
கனிரசமாய் வாழ்விருக்க,

காந்தாமாய் நீயிருந்து
கணவனுக்கு நீ தாசியாக,
கள்ளமில்லா தாசனாக
கலக்கட்டும் அவன் உன்னுடனே.

காலம் காலமாக இணைந்திருந்து
கவிதையாகட்டும் வாழ்க்கையது.
கற்பனைக்கெட்டா நினைவுகளும்
காவியம் பாடட்டும் கம்பனை போல்

கற்புக்கு இலக்கணமதை
கற்று கொள்ளட்டும் உனைக் கண்டு
கலக்கும் உங்களுறவில்
கலைகளது தோன்றட்டும்.

கண்மணிகளாய் வாரிசுகள்
கணக்காய் இரண்டு பிறக்கட்டும்.
காத்து வளர்க்கும் உதிரங்களது
கச்சிதமாய் வளரட்டும்.

கண்பட்டு கருக்காமல்,
காத்து கருப்பு அண்டாமல்
கவனம் கொள் நிலையாக
கரும்பொட்டிடு சிறிதாக.

கரும்பென இனிக்கட்டும் வாழ்வுமது
கசப்புகளை இயல்பாய் கலைந்து விடு.
கட்டியவன் தூணாய் உனைக் காக்க,
கடவுளிருப்பார் துணையாக.



ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


பத்ரி நாராயணன்.A.M. 🙏

No comments: