Translate

Tuesday, April 24, 2018

தீராத குறைபாடு, தீருமோ நிலைபாடு?




நீர் குறைப்பாடு இருந்தாலும்
சீராக நீர் பாய்த்து,
முத்துகளாய்
நெற்மணிகளை விளைவித்து,
சிந்தாமல் சிதராமல்
மணிகளை ஒன்று சேர்த்து,
பழுதுக்கு வாய்ப்பின்றி
பழுப்பு வண்ணம் ஆகாமல்
நெல்லை அவித்து கொட்டி, 19
நொய்யின்றி பதமாக
அரவை சாலையில் அரவையிட்டு,
அள்ளிக் கட்டிய அரிசி மணிகள்
கூடாத விலைக்கு
அத்தனையும் விற்று விட்டு,
தீராத கடனுக்கு
விற்ற பணத்தை கட்டி விட்டு, 39
கால் நடையாய் வந்து சேர்ந்தான்
களத்து மேட்டுக்கு மீண்டுமவன். 46
கந்து வட்டி மேலேறி
அவன் கழுத்தை பிடிக்கையிலே,
கழுத்துக்கு கயிறு கொடுத்தான்
சுருக்காக மாட்டிக்கொண்டு.
தொடர் கடனில் குடும்பத்தை தவிக்க விட்டு
நல்லிடமோ தீதிடமோ போய் சேர்ந்தான்.
இன்று வரை இந்நிலையே
என்று மாறுமோ அவர் நிலையே. 72


ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நாராயணன். 🙏

No comments: