Translate

Friday, April 20, 2018

உறவின்றி இருந்தாலும்



சொட்டு சொட்டாய் சொட்டிய நீரெங்கே?
சொட்டுக்கும் காத்திருக்கும் நிலையிங்கே.
அற்று போனதே இணைப்புகளிங்கே.
இயற்கையை சுரண்டிய மனிதர்களுமிங்கே. 13

எங்கள் வாழ்வு முடிந்த பின்னால்
உங்கள் வாழ்வு எத்தனை நாளிங்கே?
இயற்கை படைப்பை சுரண்டி நீங்கள் பிழைத்தால்
அடங்குமோ அதுவும் உங்கள் கைகளுக்குள்ளே. 30

எங்கள் அழிவு உங்கள் கையால்,
உங்கள் அழிவு உங்கள் செயலால்.
சொந்தங்களுடன் சுகமாய் வாழ
இன்றே தொடங்குங்கள்
இயற்கையைக் காக்க. 45

இயற்கை தானாய்
இலவசமாய் கொடுக்கும்.
இல்லையென கூறாமல்
இன்னலின்றி காக்கும். 54

புரிந்தால் உமக்கு
புவியும் செழிக்கும்
புகழோடு உமக்கு
புண்ணியமும் கிடைக்கும்.  62

எனக்கென்று நினைத்தா
உமக்கிதை சொன்னேன்?
என்றும் உள்ளொன்று வைத்து
பிறதிறத்துப் பேசேன். 71

இயற்கையின் படைப்பில்
அனைவரும் சமமே.
அறிந்து தேர்ந்த உனக்கு
வலுவும் அதுவே
அழிவுக்கு பாதை
வகுத்ததும் அதுவே. 84

அதனை உணர்ந்து
அறவே மாறினால்
அழிவிலிருந்து மீளுமே
அகிலமும் உன்னால்.  92


ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்


No comments: