Translate

Tuesday, October 13, 2009

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் - உரை -5









4 ன் தொடர்ச்சி...


மாற்று திறனுடைய என் உடன் பிறவா சகோதர சகோதரிகளே, தனிப்பட்ட முறையில் உங்களுக்காக எந்த ஒரு செய்தியையும் பேசவில்லையே என நீங்கள் நினைத்திருக்கலாம். நம்மைப் பற்றி என்னுடைய எண்ணங்களை மற்றொரு சமயத்தில் உங்களுடன் உறவாடுகிறேன். ஓரிரு விசயங்களை மட்டும் உங்களுடன் இந்த மேடையில் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். ஒன்று மது, புகை, போதை மற்ற தீயவழக்கங்களுக்கு உட்பட்டு விடாதீர்கள். இரண்டு எத்தனையோ உதவிகளை பெற வேண்டிய நிலையில் நாம் இருந்தாலும், இரத்தம்,கண், உடல் உறுப்பு தானம் செய்ய நீங்களும் பதிவு செய்து உதவுங்கள். அடுத்து உங்களுக்காக நானும், எனக்காக நீங்களும், நமக்காக மற்றவர்களிடமிருந்தும் தேவையான தகவல்களை கேட்டுப் பரிமாறிக் கொள்வோம். துணிந்து செயல்படுவோம், வெற்றியினைக் கைக் கொள்வோம்.

என்னைப் போல் பிரச்சாரம் செய்து வருகின்றவர்களுக்கும், உடல் ஊனமுற்ற நிலையிலும் மனஉறுதியுடன் திருவாரூர் திருதுறைப்பூண்டியிலிருந்து சென்னை வரை சைக்கிள் பயணமாக உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட திருவாரூர் மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்க மாவட்ட செயலாளர் திரு. ஜெகதிசனுக்கும், உடன் வந்த சங்க நண்பர்களுக்கும் இந்த சிற்றுரையை சமர்ப்பிக்கிறேன். இத்தனை நேரம் நான் பேசியதை கவனமாக கேட்ட உங்கள் அனைவருக்கும், எனக்கு வாய்ப்பு அளித்த அரிமா நண்பர் திரு மாம்பழம் முருகன் அவர்களுக்கும், அரிமா சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்து முடித்துக் கொள்கிறேன். நன்றி. ஜெய் ஹிந்த்.


No comments: