
விழிப்புணர்வு பிரச்சாரத்தை எவ்வளவு தான் செய்து வந்தாலும், மனத்துக்குள் இருக்கும் ஒரு உறுத்துதலை, வேதனையை இந்த மேடையில் தெரிவிக்க விரும்புகிறேன். சேலத்தில் ஒரு தாய் வளர்ந்து தோள் கொடுப்பானேன நினைத்து , ஏழ்மை நிலையிலும் தன் ஒரே மகனை தனியார் பள்ளி ஒன்றில் விட்டு விட்டு சென்ற சிறிது நேரத்திலேயே, அந்த சிறுவன் தவறி கீழே விழுந்து அடிப்பட்டு மரணம் அடைந்து விட்டதாக தகவல் வர, சென்று பார்த்த தாயோ, மகனின் உயிர் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பதை உணர்ந்து. மருத்துவமனைக்கு செல்ல, போராடிய டாக்டர்களோ முளைச்சாவு அடைந்து விட்டதாக கூற, பின்னாளில் தனக்கிருந்த ஒரே அரவணைப்பு இழந்த சோகத்திலும், தன் மகனின் உடல் மற்றவர்களுக்காவது பயன் படட்டுமே என்ற விழிப்புணர்வு ஏற்பட்டதின் பயனாக, அந்த சோகத்திலும் பலரிடம் மன்றாடி, ஆம்புலன்ஸ் மூலமாக சேலத்திலிருந்து சென்னை கொண்டு வந்தும், தாயாக இவளிருந்தும், குடும்பபிரச்சனையினால் தனித்து சென்றுவிட்டாலும் சட்டங்களின் படி தந்தையின் கையெழுத்து இருந்தால் தான், தானம் பெற்றுக் கொள்ளமுடியுமென்று மருத்துவ அதிகாரிகள் அலட்சியமாக நடந்துக் கொண்டதினால், அந்த சிறுவனின் உடல் உறுப்புக்கள் யாருக்கும் பயனற்று போக, அந்த தாயின் கனவுகளும், விழிப்புணர்வும், இலட்சியமும் மண்ணோடு மண்ணாகியது. உடல் உறுப்பு தானத்திற்கான சட்டங்களை எளிமையாக்கி அனைவரும் பயன் பெற செய்ய வேண்டுமென அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரென்ன மலிவா? உறவொன்று கிடைத்ததால் உதித்தது ஒன்று. உறவற்று போனதால் உதித்ததை வளர்த்தாய். உறுதியொன்றை எடுத்தாய் உறுதியென நினைத்து. உயர்த்தும் உறுதியில், பள்ளியில் சேர்த்தாய். உயர்வளிக்குமிடத்திலே உயிரும் பறந்ததோ. உதித்திருந்த மலரும் உதிரும் நிலையிலே, உதித்தவன் உயிருடன் உன்னுயிரும் துடிக்க, உன்னுடைய சோகமோ உயர்வாயிருக்க, உணர்ச்சிகளுக்கிடையில் உறுதியாய் எடுத்தாய்.. உள்ளத்தின் சோகமோ பறந்தே அலைந்தது. உன்னுடைய உள்ளமோ விரிந்தே கிடந்தது. உடல் தானம் செய்து, ஊனத்தைப் போக்கி, ஊனமுற்றோர் வாழ உதவி புரிய, ஈன்றதை பறிக்கொடுத்த நிலையிலே, ஈடில்லா இழப்பிலே, முடிவதை செய்தாய் விரைந்தே எடுத்தாய். மகனென்ற உறவு இல்லாமல் போகலாம். உன்னுடைய செயல்கள் தோல்வியாய் தெரியலாம். உன்னுடைய நினைப்புக்கு தோல்வியே இல்லை. அஞ்சலி செலுத்த தெரியவில்லை. ஆறுதல் சொல்லவும் முடியவில்லை. தலை வணங்குகிறேன் உனது முடிவுக்கும் உறுதிக்கும். என் உரையை முடிக்கும் முன்பாக ........
No comments:
Post a Comment