Translate

Monday, October 5, 2009

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் - உரை -1





























அக்டோபர் 2 ந் தேதி நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின்
141து பிறந்தநாளை முன்னிட்டு

சென்னை மேற்கு மாம்பழம் அரிமா சங்கத்தின் மூலம் நடைப்பெற்ற

விழாவில் நான் ஆற்றிய உரையை அப்படியே

வெளியிட்டிருக்கிறேன். பொறுமையாக படித்து

உங்கள் கருத்துக்களை, எப்பொழுதும் கேட்பதுப் போல,
இதிலும். கேட்டிருக்கிறேன். அவ்வளவு தான்.

இதோ என் உரை:


மதிப்பிற்குரிய பெரியோர்களே, மற்றும் இந்த விழாவிற்கு வந்திருக்கின்ற

அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக்

கொள்கிறேன். நண்பர் அரிமா மாம்பழம் முருகன் அவர்கள் தமிழ்நாடு உடல்

ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்கத்தில் முதன் முதலாக அறிமுகமானார்.

அவர் ஒரு அரிமா என்பதை அறிந்ததும் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதுண்டு.

எனென்றால் நானும் அரிமாவாக ஒரு சமயம் இருந்தது மகிழ்வான

நினைவுகளாகும். மாம்பழம் அரிமா சங்கத்தின் மூலமாக நமது தேசத்தந்தை

மகாத்மாவின் பிறந்த நாளையொட்டி விழா நடைப்பெற உள்ளது. அவசியம்

கலந்துக் கொள்ளுங்களென அழைப்பு விடுத்ததற்கும் , பேசுவதற்கு

வாய்ப்பளித்ததற்காகவும் நன்றியை முதலில் தெரிவித்து கொள்கிறேன்.

மகாத்மா அவதரித்த இன்றைய நாளிலே பேசுவதற்கு எத்தனையோ

விஷயங்கள் இருக்கின்றன. ஒன்றா இரண்டா, எதை பேச, எதை

விட்டு விட. அவர் காட்டி, சொல்லி சென்ற விசயங்களில்

சிலவற்றையாவது நாம் கடைப் பிடித்தால், நாமும் மற்றும் நம் நாட்டு

நிலைமையும் எப்படியிருக்கும் சிறிது சிந்தித்து பாருங்களேன்.

இன்றைய காலகட்டத்திற்கு விழிப்புண்ர்வு ஏற்படுத்த வேண்டிய சில

செய்திகளை பேச விரும்புகிறேன். அதாவது கண் தானம், இரத்ததானம்,

உடல் உறுப்பு தானம் என்ற செய்திகளை சமிப காலமாக அடிக்கடி

கேட்டுக் கொண்டிருப்பீர்கள். ஆனால் யாரோ யாருக்கோ

என்னமோ கொடுக்கிறார்கள் என்ற அளவில் தான் நீங்கள்

நினைத்திருபபிர்களே தவிர, ஒரு நாள் நமக்கும் தேவைப்படலாம், அல்லது

நம்மால் இந்த வகையில் பிறருக்கு உதவ முடியும் என்று நம்மில் பலர்

நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டோம். இப்பொழுது இரத்ததானத்தைப் பற்றி

சிறிது பேச விரும்புகிறேன்,


இரத்ததானம்

~~~~~~~~~~~~~~~

13 வயதிலிருந்து 60 வயது வரை, நோயாளிகள் தவிர மற்றவர்கள் ( இதில் ஊனமுற்றவர்கள் நோயாளிகள் அல்ல.),

ஒவ்வொரு 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை

இரத்ததானம் செய்யலாம் . இரத்ததானம் செய்த ஓரிரு நாட்களில்

"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு".


திருவள்ளுவப் பெருமான் கூறியதைப் போல, நம் உடலில் புதிய

இரத்தம் ஊறிவிடும். ஆகவே பயப்பட தேவையில்லை. (ஆத்துலேயே தண்ணிய காணோம், ஆத்துப்படுக்கையிலே தண்ணிக்கு எங்க போறதுன்னு கேட்டுடாதிங்க! ) புதிய இரத்தம்

ஊறுவதால் புத்துணர்ச்சியுடனும், இளமையுடனும் திகழகலாம். நாம்

செய்யலாமா செய்யக் கூடாதா என சந்தேகம் இருப்பவர்கள் டாக்டரிடம்

ஆலோசனைப் பெற்று, அதன்படி, நடந்துக் கொள்ளுங்கள்.

இதோ இந்த சிறிய கவிதை உங்களுக்காக.

இறைவனால் வழங்கப்பட்டதை

நீங்களும் வாழ்ந்துக் கொண்டு

பலருக்கு வழங்கலாம் - இரத்தத்தை .

இறைவனால் படிக்கப் பட்டதை

இறைவனால் படிக்கப் பட்டவர்களுக்கு

தானமாக கிடைத்ததை

தானமாக கொடுங்கள்.

வினாக்காதிர்கள் எதையும்,

உங்களுக்கு உபயோகம் இல்லாததை,

கொடுங்கள்

உபயோகம் உள்ளவர்களுக்கு,

அதில் அடங்கட்டும்

கண்களும் இரத்தமும்.

வாழும்போது இரத்தத்தையும்

வாழ்வு முடிந்த பிறகு

கண்களை இருவருக்கும் ,

பலருக்கும் கொடுக்கலாம்

உங்கள் உடல் உறுப்புகளை

தானமாக.

தொடரும்..

2 comments:

தங்க முகுந்தன் said...

இன்றுதான் உங்களுடைய பதிவைப் பார்த்தேன்! அருமை - நேரமுள்ளபோது வாசித்து எனது கருத்தை இடுகிறேன்! ஒரு சிறிய கேள்வி - அரிமா என்பதன் அர்த்தத்தைச் சொல்வீர்களா?

Dhavappudhalvan said...

ஒரு சிறிய கேள்வி - அரிமா என்பதன் அர்த்தத்தைச் சொல்வீர்களா?
இது தங்கமுகுந்தனின் கேள்வி.

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் முதலில் எனது நன்றிகள்.
அரிமா என்றால் சிங்கத்தை குறிக்கும் மற்றொரு சொல்.
அரிமாசங்கம்- "Lions Club" லயன்ஸ் கிளப்'ஐ குறிப்பது என்பது தங்களுக்கு தெரிந்திருக்கும். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.