1 ன் தொடர்ச்சி
அடுத்ததாக கண் மற்றும் உடல் உருப்புதானம
+++++++++++++++++++++++++++++++++++++++
நமக்கும் நம் தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைப்பதில் எண்ணம் செலுத்துகிறோம் அல்லவா? அதுபோல் நம்மை புகழ்ந்து பேசும் செயலை, நாம் இருக்கும்போது பேசுவதைவிட, அதிகமாக நம் மறைவுக்கு பின்னும் நிலைத்து நிற்கும்படியாக, நம்மால் முடிந்த செயல்களை செய்தால் என்ன? அது ஒன்றும் பெரிய விசயமில்லை.
இந்த சமயத்தில் "திருவிளையாடல்" திரைப்படத்தில் ஒரு பாடலின் சில வரிகள்.
" பாத்தா பசுமரம், படுத்து விட்டா நெடுமரம். சேத்தா விறகுக்காகுமா ஞானதங்கமே!
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா? ஞானத்தங்கமே!! தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா? “
அதாவது மண்ணோடு மண்ணாகவோ, தீயிலிடப் பட்டு பிடி சாம்பலாகவோ பயன்படாமல் போகின்ற நமது உடலை,
நமது மறைவுக்கு பிறகோ அல்லது முளைச்சாவு ஏற்பட்டுவிட்டாலோ , நமது உடலையும், உடல் உறுப்புகளையும், கண்களையும் தானமாக வழங்க தக்க ஏற்பாடு செய்து வைத்து வழங்கினால், அந்த உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்தால், அவர்களுக்கு மறுவாழ்வு கிட்டுமல்லவா!.
உயிர் பிச்சை அளித்ததனால், மனிதனாய் இருந்த நீங்கள் கடவுளே போற்றப்படுகிறீர்கள்.
எமது தாயார் மற்றும் சகோதரியின், உடல் உறுப்புகள் தானம் செய்யக் கூடிய நிலையில் இல்லாததால், கண் தானம் மட்டும் செய்துள்ளோம். அவர்களுக்காக எழுதிய ஒரு சிறுக்கவிதை.
விழி இரண்டு ஈந்தீர்.
வாழ்வு இருவர் பெற்றார்.
உங்கள் விழி வழியே
உலகை அவர் கண்டார்.
அவர் விழி வழியே
உமை யாம் கண்டோம்.
செய்யும் செயலை நிறைவாய்,
துணிந்து செய்தீர் மகிழ்வாய்.
நம் இந்திய திருநாட்டிலே தற்போது இரு கண் பார்வையும் இல்லாதவர்கள் இரண்டு கோடி பேர்களுக்கு மேல் உள்ளார்கள். ஆனால் வருடந்தோறும் நல்லிதயங்களால் வழங்கப்படும் கண்களோ வெறும் 20 ஆயிரம் மட்டுமே. மேலும் ஒவ்வொரு வருடமும் அதற்கு கூடுதலாகவே பார்வையிழப்பவர்கள் இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய விசயமாகும்.
தொடரும் 3 ல்
No comments:
Post a Comment