ஆண்டுகள் ஒவ்வொன்றாய் பல கடந்து போகையிலும்
புதிதாய் ஒன்று பிறக்கையிலும், கொள்கைகள் இதுவென்று
சத்தியங்களாய் உருகொடுத்து சபதங்கள் பல செய்வோம்,
குறிகோள்கள் பல கொள்வோம். உறுதிகள் பல எடுப்போம்.
உள்ளபடி அத்தனையும் ஆழ்ந்த உறக்கத்திலே,
கும்பகர்ணனாய் வீழ்ந்திருக்க.
ஓ.. அவனும் தான் விழித்திருப்பான்,
மாதம் ஆறு முழுதிலுமே..
அதுவுமில்லை நம்வாழ்வில்.
உணர்வுகளுக்கு விழிப்புமின்றி,
கழிகிறது ஒவ்வொன்றும் முழுதாக.
உறக்கம் களைந்த சிறு பொழுதினிலே,,
தமிழ் புத்தாண்டு நெருங்கிருக்க,
தாங்கொண்ணா மகிழ்வுடனே,
தங்கத்தட்டில் உமை இருத்தி
தாய் தமிழால் நாம் உறவாடி,
நலம் பயக்கும் செயல்களை.
நாடியதை முடித்திடவே,.
உறவுகளை புதிப்பிப்போம்,
புது வாழ்வாய் சீரமைப்போம்.
புது ஒளி நம் வாழ்வில் நிலையாய் புகிந்திடவே,
தமிழன்னை அருள் வேண்டி,
தமிழ் புத்தாண்டில் வாழ்த்திடுவோம்
வாழியே நலமும்,வளமும் பெற்றென்று.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
No comments:
Post a Comment