Translate

Saturday, September 15, 2007

கணபதியே ! வரமதை அருள்வாயே .

செய்யும் செயலின்
விரைவைக் கருதி
முடிவதை எடுத்து
கருத்தேனக் கொண்டார்.

கொள்ளும் எண்ணம்
சிதறா வண்ணம்
செயலைச் செய்ய
புத்துருக் கொடுத்தார்.

முதலென வரவே
நலமதை நினைத்து
வலமதைக் கொண்டார்,
நினைத்ததை முடித்தார்.

வாழ்வெனக் கொண்டால்
போட்டியது உண்டு.
வெற்றியதில் அடைய
விவேகமுடன் உழைப்பீர்.

நாடும் வீடும்
நலமது பெறவே
வழிதனை அறிய
பணிவுடன் பணிந்து
கணபதியைத் துதிப்பீர்.

2 comments:

sivayogi said...

கடவுள் என்று தலைப்பு வைத்து சிலை வழிபாட்டை உணர்த்துவது உங்களின் அறியாமை.கடவுள் என்பது உங்களை நீங்கள் உணர்வது.

Dhavappudhalvan said...

இருக்கலாம் சகோதரரே. என்னை நான் உணர்ந்து கொள்வதற்கு சிலை வைத்து வழிப்படுவது ஒரு வழியாக நான் கருதுகிறேன் அவ்வளவு தான். என் தேவைகளையும், வருத்தங்களையும் ஏக்கங்களையும் யாரிடமாவது பகிர்ந்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே. என்ன செய்ய. உலை வாயை அடைத்தாலும் அடைக்கலாம். ஆனால் ஊர் வாயை? அதுபோல் உங்களிடம் பகிர்ந்துக் கொள்ளமுடியுமா?