Translate

Thursday, March 8, 2018

இத்துபோக உடாதிங்க





நாட்டுப்புற பாடலொன்ன
பாடிக்கிட்டே
நான் பறந்தேனுங்க.
ஓய்ந்து போன நேரத்திலே
உட்கார இடமின்றி
நான் தவிச்சேனுங்க.


கெட்டியான கட்டடங்கட்டி
தங்கியிருக்கும் மகராசாக்களே!
எங்களுக்கொரு கூடு கட்ட
மரமொன்னை விட்டு வையுங்களேன்.


பசுமை இருந்தா
குளுமை உமக்கிருக்குங்க.
பகமை பாரட்ட என்னயிருக்கு
சிந்தையோட்டுங்க?
அழித்து விட போதுமுங்க ஒரு நொடிதாங்க.
ஆக்குவதற்கு எத்தனை நொடினு
யோசிச்சு பாருங்க.


காசுக்காக மரம் வெட்டி
பொளைக்காதிங்க.
நீங்க நினைச்சா
மரம் உடனே கிடைக்காதுங்க.
உங்க எண்ணம் பறக்கட்டும்
எங்களைப்போலங்க.
உங்க சிந்தனை விரியட்டும்
எங்க சிறகைப் போலங்க.
நீங்க மனசு வெச்சா
அத்தனையும் நடத்தலாங்க.
உங்க குலம் செழிக்க இயற்க்கையாய்
வாழ்வு நடத்துங்க.


ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நாராயணன். 🙏

No comments: