Translate

Sunday, March 4, 2018

கப்பலடி நீயெனக்கு



கட்டுக் கரும்பாய் நீயிருக்க,
கட்டிளங்காளையாய் நானிருக்க,
கட்டுப்பணம் வேண்டாமடி,
கடித்து உனை நானுறுஞ்ச,
கனிந்தவளாய் நீயிருக்க,
காத்திருக்க விடுவேனோ?
கட்டியுனை அணைக்காமல்.

கண்டபடி அலையுதடி,
கண் மூட தடுக்குதடி.
காய்ந்து ரத்தம் கொதிக்குதடி.
களவாடத் துடிக்குதடி.

கை விட்டு போக வேண்டாம்.
கவலையில் எனை ஆழ்த்த வேண்டாம்.
கல்யாணம் ஆனபின்னும்
கண்ணின் மணியாய் காப்பேனடி.

கட்டி விட்டான் கல்லறையவன்,
காசு பணம் செலவளித்து.
கட்டுவேனடி நானுமுனக்கு
காதலுடன் சேர்ந்து வாழ.

கழுத்தை மட்டும் நீ நீட்டு,
கணவனெனும் உரிமைய
டைய.
கட்டிக்கிட்ட உடுப்போடு
கலந்து விடு என்னோடு.

போனதெல்லாம் போகட்டுமடி..
பொண்ணு நீ வேண்டுமடி.
பொறந்த வீட்ட துறந்து விட்டு,
புகுந்த வீடுனு வாடி புள்ள.

உன் கண் சாடையில் சிக்கிபுட்டேன்.
மனச
கைமாத்தி விட்டுபுட்டேன்.
காதல் நமது கேட்டையடி
காவியமாய் அது நிலைக்குமடி.


ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.🙏

2 comments:

Tamil Nenjan said...

எளிமை. அருமை. இனிமை.

Dhavappudhalvan said...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் வணக்கம் கவிஞர் உயர்திரு.Tamil Nenjam அவர்களே