Translate

Saturday, May 17, 2014

தமிழகத்தில் "மோடி அலை "



வாக்காளர்களின்  கட்சி சார்புகளை பற்றி அறிந்துக் கொள்ளாமலே, தனிப்பட்ட முறையில்  சிலரிடம் பேசிய போது இப்பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கூட்டணியின் "மோடி அலை வீசவில்லையா?" என்ற எமது கேள்விக்கு, கிடைத்த பதில்கள். இதோ....

1) கூட்டணி கட்சிகளின் இட ஒதுக்கீடு சண்டைகள்.

2) பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக இடங்களை விட்டுக் கொடுத்து, கூட்டணி கட்சிகள் தங்களுக்குள் வீண் கௌரவங்களை விட்டுக் கொடுத்து கூட்டணியாக செயல் பட்டிருந்தால்...

3) இதுதான் வாய்ப்புஎன  நினைத்து தங்கள் குடும்ப உறுப்பினர்களை நிறுத்தாமல் கட்சியின் வேறு நபர்களுக்கு வாய்ப்பு அளித்திருந்தால்... வெற்றிக் கிடைத்திருக்கும். உ-ம்: தே.தி.மு.க.,  சதீஸ் (குடும்ப உறுப்பினர்), ரசிகர்களையும், கட்சி ஆரம்பித்தபோது கிடைத்த ஓட்டுகளை, தற்போதைய ஓட்டுகளாக கருதியது.  

4) ப.ம.க., அன்புமணி ... வன்னியர் ஓட்டுகளுடன், வேறு சில வெளியிட கூடாத சமாசாரங்கள். அதனால் வெற்றி.

5) முக்கியமான சூழ்நிலைகள் தவிர, தமிழக எல்லையை தாண்டாத தமிழக வாக்காளர்களின் மனநிலை. பாரதிய ஜனதா கூட்டணி முடிவு செய்வதில் ஏற்பட்ட வீண்குழப்பங்கள்  தமிழக வாக்காளர்களின் மனநிலையில் நம்பிக்கையின்மையை தோற்றுவித்து விட்டது.

6) குறைந்தபட்சம் மேலும் சில இடங்கள் கண்டிப்பாக கூடுதலாக கிடைத்திருக்கும்.

No comments: