பாசமுடன் அன்பை,
நேசமுடன் பொழிந்திடுவேன்.
கண் வழியே கண்டிடுவேன்.
மகிழ்ந்திருக்க செய்திடுவேன்.
முடிந்த வரை
செயல் வழியே காட்டிடுவேன்.
வருந்த செய்ய எண்ணமில்லை.
மறைத்துப் பேசத்தெரியவில்லை.
விளக்கி சொல்ல அறியவில்லை.
மனமது கனத்தாலும், மகளே!
வாழ்த்த வேண்டியவன்-
நான் அல்லவா!!
மகிழ்வுடனும் நலமுடனும்
பல்லாண்டு வாழ்கவென
இறைவனை தாள் பணிந்தே
மனம் திறந்து நேசமுடனும்,
அன்புடனும், பாசமுடனும்
வாழ்த்திட்டேன் இப்புத்தாண்டிலே.
என்றும் உங்களுக்காக,
அப்பா.
பின்குறிப்பு:
எந்த மனநிலையில் என்பது ஞாபகமில்லை. 31/12/2005ஆம் தேதி இப்புத்தாண்டு கவிதையை எனது மகள் நிரஞ்சனாவுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறேன். என் மகள் தன்னிடமிருந்த தேவையற்ற காகித தகவல்களை கழித்து விட்டு, எடுத்து வைத்திருந்த காகிதங்களில், என்னுடைய இக்கவிதையும் எதிர்காணா வகையில் இருக்க கண்டேன். இந்த வலைப்பதிவை துவக்குவதற்கு முன்பாகவே எழுதிய கவிதையாகையால், இன்று பார்த்த உடனே பதிவு செய்து விட்டேன்.
No comments:
Post a Comment