Translate

Sunday, November 15, 2009

அதிர்ஷ்ட தேவதை

கதவைத்தட்டி சொல்கிறது.
புலமைக்காட்டி
புதுவாழ்வு பெற்றுக்கொள்.

விரைந்து சென்று நீயும்
விருதுகளை அள்ளிக்கொள்.
வழி காட்டி சொல்லிவிட்டு
பறந்து அது செல்கிறது.
செய்தியை அறிந்த நான்
செயலாற்ற விரைந்தேனே.

கரம் பிடித்த போட்டியை
கை நழுவ விட்டேனே.
வெற்றியடையும் பாதையை.
தேர்ந்தெடுத்து செல்லாமல்
விலகிதான் சென்றேனே.

மேடையேறி பேச்சுதனை
மேளம் கொட்ட வைத்தேனே.
பறிப்போன பட வாய்ப்பை 
பிறகு நான் அறிந்தேனே.

காதலித்த கவிதைகளை 
காகிதத்தில் ஏற்றியிருந்தால்!
கனவுகளை கண்ட நான்
திரைக்களத்தில் வென்றிருப்பேன்.

காலம் கடந்தபின்
கலங்கி நிற்கின்றேன்.
வாய்ப்பை தவற விட்டு
வழி பார்த்து நிற்கின்றேன்.


காவியமாய் இசைத்திருக்கலாம்
கலைவிழி ‘’மா’’விலே.
மாறுப்பட்ட நினைவுகள்
மனத்திலே இருந்தாலும்,
  
மாற்றுத்திறனாளர் சிந்தனையில்
மாற்றமதை கொண்டு வர
‘’மா’’ படைக்கும் வெற்றி காண
மகிழ்வுடன் காத்திருப்பேன்.

உலகை சுற்றி வந்து,
உள்ளங்களை கவர்ந்து அது,
உருக வைக்கும் மனங்களை –அதை
உருவாக்கி காட்டட்டும் ‘’மா’’.

ஆவலுடன்,

-தவப்புதல்வன் 

No comments: