Translate

Friday, December 19, 2008

ஓரு இளமையின் சோகம், பூத்த பூ காய்க்க வில்லை



கூட்டமாக இருந்த போது
குறிப்பாக கவர்ந்தானே.

துள்ளிக் குதிக்கிற வயதாலே
குதுகுலத்தை உணர்ந்தேனே.

ஒன்றாக சேர்ந்து தான்
சுற்றித் திரிந்தோமே.

கட்டவிழ்த்த கன்று போல
கடலையில் புரண்டோமே.

ஒன்றாக இருப்பது போல்
ஒரே பொருளை ருசித்தோமே.

எச்சிலெல்லாம் இனிப்பதாய்
மயக்கத்தில் சொன்னேனே.

தனியாக சென்ற போது
தவறிழைக்க செய்தானே.

கட்டு காவல் அத்தனையும்
கத்தரித்து சென்றேனே.

ஒன்று சேர நினைத்தபோது
ஒதுங்கித்தான் போனானே.

விட்டுவிட மனமின்றி
வீம்பாக இருந்தேனே.

நானவனை வளைத்ததாய்
சொல்லித்தான் திரிந்தானே.

அறைகூவல் விடுத்தபோது
அடங்கித்தான் போனானே.

சேர்த்து வைத்த பின்னாலும்
சேராமல் உள்ளோமே.

காலுக்கிட்ட விலங்காக
கோபமாக உள்ளானே.

இணைந்திருக்க நினைக்கின்றேன்
முடியாமல் போகிறதே.

சொல்லம்புகள் பட்டுத்தான்
கூசித்தான் போகிறதே.

மலிவான காதலாய்
மாறியது போனதே.

வலியச் சென்று, விஷப்பாம்பை
சுற்றித்தான் கொண்டேனே.

குடும்பத்துக்கு பாரமாய்
மாறித்தான் போனேனே.

கழுத்திலிட்ட தூக்காக
துடித்துத்தான் போகிறேனே.

பூவாய் பூத்திருந்தேனே,
உரியதான காலத்தில்.

காய்க்காமல் இருக்கின்றேனே,
காய்க்க வேண்டிய நேரத்தில்.








No comments: