Translate

Friday, December 19, 2008

தூணும் துரும்பும்


நினைப்பு

தூணாகக் கருதி
துணையாய் வரிந்தாள்.
துரும்பாகிப் போனான்
துணையவன் அவனே.



மாற்றம்

தூணென நினைத்து
துணையைப் பார்த்தான்.
துரும்பென நினைத்தாள்
துணையவள் அவனை.


கிண்டல்

தூணாக அவனும்
துரும்பாக அவளும்.
மாறித்தான போனாரே,
தூணாக அவளும்
துரும்பாக அவனும்.


காலம்

துரும்பாக இருந்தாள்
பல் குத்த தோதாக,
தூணாகி போனாளே
பாழான வயதாலே.


கோலம்

தூணாக இருந்தானே
இளமைக் காலத்தில்.
துரும்பாகி போனானே
முதுமைக் கோலத்தில்.


கேலி

செய்தார் அன்று
தூணுடன் துரும்பென்று.
செய்கிறார் இன்று
துரும்புடன் தூணென்று.

வளமை

தூணாக இருந்தது
துரும்பாகி போனது.

நிலமை

தூணென்ற நிலையும்
மறைந்து விட,
துரும்பென்ற நிலையில்
வாழ்வதுவே.


ஏமாற்றம்

தாணுக்கு நிகராய்
நினைத்திருந்தார்.
துரும்புக்கு சமமாய்
மாறி விட்டார்.


ஏக்கம்

தூணுக்கு நிகராய் இருந்தாலும்,
துரும்புக்கு சமமாய் நினைத்திருந்தார்.
துரும்புபென்ற நிலையில் இருக்கையிலே,
தூணாய் மாற முடியவில்லை.


நம்பிக்கை

தூணாக இருந்தது
துரும்பாகி போனது.


அவநம்பிக்கை

தூணாக இருப்பது
துரும்பாக மாறுமோ.


துக்கம்

தூணாக உள்ளார்
துணையைக் கொண்டு.
துரும்பாகி போவாரோ
துணையை இழந்து.

No comments: