Translate

Saturday, December 6, 2008

சாப விமோசனம்

மேலும் கீழும்
பட்டாடை மூடியிருக்க,
காலிலும் கையிலும்
வளையல்கள் பூட்டியிருக்க,

மூக்கிலும் காதிலும்
குத்திகள் பளபளக்க,
கழுத்திலிருந்த சரங்கள்
மார்புடன் உறவாட,

வண்ணப்பூச்சிகளாய்
இமைகளோ சிறகடிக்க,
கோளங்களாய்
விழிகள் ஒளி வீச,

நிறமிட்ட உதடுகளில்
நீர்ப்பூச்சு துளிர்த்திருக்க,
உடுக்கையாய்
இடை சிறுத்திருக்க,

நறுமணம் உமிழ்ந்தாள்
நாசிகள் உறுஞ்சிக் கொள்ள,
நின்ற நிலையாலே
சொரிய வைத்தாள் பெருமூச்சை.

காற்றின் விசையாலே
உடைகளோ பட்டமாக,
மனமோ பறந்தது
அப்பட்டமாக.

என் இதயத்தின்
துடிப்போசை,
அவளை எட்டியதோ
நாதமாக.

பரிதவித்த எனை நோக்கி
இளநகைக் காட்டினாள்,
விழிதனை
கணநேரம் ஓட விட்டு.





No comments: