Translate

Friday, December 26, 2008

பஞ்சமில்லா......


மோசடி ஆண்களுக்கும்,
மோசமான பெண்களுக்கும்
கிடைத்ததே வாய்ப்பு
பொன்னான வாய்ப்பு.

நீதியாய் கிடைத்ததே
சட்டங்களில்லாமலே.
மேலைநாட்டு நாகரீகம்
பாதுகாப்பாய் நுழைந்தே.

'' லிவ் இன் ரிலேசன்ஷிப்''
என்ற உறவு வந்ததே.
பாரத்தின் பண்பாட்டை
ஒழிக்கத் தான் வந்ததே.

மோதிரமும் தேவையில்லை,
தாலிக்கும் வேலையில்லை,
''தலாக்''குக்கும் வழியில்லை,
உறவுக்கும் முறைக்கும்
இனி தான் சோதனையே. 

இருவரிடை மட்டுமே
விருப்பம் இருந்தால் போதுமே.
காத்திருக்க தேவையில்லை
தாளிட்டுக் கொள்ளலாம்.

தேவையின்றி போனாலே
திறந்து விட்டு போகலாம்.
மற்றொன்று கிடைத்தாலே
தள்ளி விட்டும் மூடலாம்.

சேர்ந்திருந்த காலத்துக்கு
அத்தாட்சி தேவையாம்.
இது மட்டும் சட்டமாம்
காக்கவென்று வந்ததாம்.
பெண்களுக்கு பாதுகாப்பாம் 
ஆண்களுக்கு இரும்பு காப்பாம்.

கழிசலான நிலையை வைத்து
பணம் நிறைய பார்க்கலாம்.
மிரட்டி, சுருட்டி வாழ்பவரோ
வளமையாக வாழலாம்.


பின் குறிப்பு; இன்றைய 23\ 12\ 2008 சென்னை தினமலர் 
   நாளிதழில், '' லிவ் இன் ரிலேசன்ஷிப்'' பற்றி செய்தி வந்திருந்தது.
 திருமண சடங்கு முறையின்றி சேர்ந்து வாழ சட்டமியற்றவோ, 
  அனுமதி வழங்கவோ இயலாது. ஆனால் அப்படி வாழ்கின்ற 
  பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று பார்லிமெண்டில் ஒரு எம்.பியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் மேற்படி பதிலை அளித்துள்ளார். அந்த செய்தி படித்ததின் தாக்கமிது.

No comments: