Translate

Friday, December 26, 2008

பண்பாடு

நம் கூட்டுக்குடும்ப உயர்வதனை
உணர்ந்தாரே மேல்நாட்டவர்.
போற்றி வணங்கி
ஏற்கின்றார் இந்நாளிலே.

கலாச்சார கழிவென்று
அவர் நாட்டிலே,
ஒதுக்கியதை நாடுகிறார்
நம் நாட்டிலே.

சொல்லித்தான் தெரிவதில்லை
மன்மத கலையே.
முன்னோரவர் வரையறுத்தார்
நம் நாட்டிலே.

பட்டப்படிப்பு பாடங்களை
சோதித்து அறியலாம்.
சோதித்தறிந்த பாடங்களை
ஏற்றும் கொள்ளலாம்.

சோதனைகள் பல செய்து
அறிந்துக் கொண்டார்கள்.
அவர்கள் வாழ்வு சோகமென்று
புரிந்துக் கொண்டார்கள்.

வாலருந்த நரியாக
மாற வேண்டாமே.
பட்டறிந்தவர் பாடங்களை
ஏற்றுக் கொள்ளுவோமே.

வாழ்வு தரும் பாடங்களை
கற்றுக் கொள்ளுங்கள்
கழிவான வாழ்வுதனை
ஒதுக்கித் தள்ளுங்கள்.

மிருகத்துக்கும் மனிதனுக்கும்
வேற்றுமை உண்டு.
புரிந்து கொண்டு வாழ்வோமே
மனத்திலே கொண்டு.

கழிவுகளைப் பூசிக்கொண்டு
கதற வேண்டாம்.
வாலறுந்த நரியாக
அலைய வேண்டாம்.

கூட்டுக்குடும்ப வசதியினை
உணர்ந்துக் கொள்ளுவோமே.
கூடி வாழ்ந்து பெருமைதனை
நாட்டிக் கொள்ளுவோமே.

இளமையிலே புதுமையென்று
ஆட்டம் போடாதே.
முன்னோர் கொடுத்த புதையலையே
நாசம் செய்யாதே.

மூத்தவனாய் நானுமிருந்து
சொல்லிக் கொடுக்கின்றேன்.
விளைநிலத்தை அழித்து நீயும்
வீனாய் போகாதே.

சீராக வைத்திருந்தால்
கணனி என்றுமே,
சிறப்பாக இருக்குமென்று
நீ அறிந்தது தானே.

சீராக அமைத்துக் கொண்டால்
வாழ்வுதனையே,
நலமாக வாழ்ந்திடலாம்
நீயுமே அறியாயோ!

சாதனைகள் பல புரிய
நம் நாட்டிலே,
நல்லவைகள் பலயிருக்கு
வாழும் வாழ்விலே.

கேடுகெட்ட நினைவுகள்
வேண்டாம் மனத்திலே.
உயர்வான எண்ணம்
வேண்டும் உன் செயலிலே.

இருக்கின்ற நல்லதை
தேடிப்பெறுவாயே.
திட்டங்களை செய்ததை
மேன்மை அடைவாயே.

2 comments:

c g balu said...

"வாழ்வு தரும் பாடங்களைகற்றுக் கொள்ளுங்கள்கழிவான வாழ்வுதனைஒதுக்கித் தள்ளுங்கள்."
கற்போம்....அதுதானே வாழ்க்கை!

Dhavappudhalvan said...

ஆமாங்க! ஆமாங்க!! நல்லா புரிஞ்சிகிட்டிங்க!!!.