நாயாய் குலைக்கிறான்,
நரியாய் ஊளையிடுகிறான்,
கழுதையாய் கத்துகிறான்,
மனிதனாய் பேசாமல்।
"""""""""""" 1 """"""""""""""""
பன்றியாய் உழல்கிறார்,
புலியாய் கொல்கிறார்,
மிருகமாய் இருந்து
மனிதத்தை உணராமல்।
"""""""""""" 2 """''''''''''''''
மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கும்
மனம் உண்டென்று,
பெண்டாள நினைக்கிறான்
அடுத்தவன்
மனைவியையும்।
""""""" ३ """"""""""'
மூக்கை நுழைத்தேன்
உரிமையென நினைத்து।
அறுப்பட்டு விழுந்தேன்
எனை ஒதுக்கி
புறந்தள்ளி சென்றதால்।
""""""""""" ४ """""""""''''
சுவாசித்தான்
அவள் சகவாசத்தாள்।
கொடுத்தாள் தனை
இழந்தான் மனம்।
சென்றாள்
அவள்
மனத்தை
பறித்துக் கொண்டு।
"""""""" ५ """""''''''
3 comments:
அருமை...உங்கள் கவிதைகளை புத்தகமாக வெளியிட்டுள்ளீர்களா?
கவிதைகளை வாசித்தவர்களின் கருத்தினால், புத்தகம் வெளியிடும் எண்ணமுள்ளது. நன்றிகள் உமது ஊக்கத்திற்கு.
Post a Comment