Translate

Saturday, November 24, 2007

காதல் படுத்தும்பாடு...

வைத்தனர் பந்தயம்
காதலை அறிய।

பனிமலை வெளியிலே,
கடும் குளிரிலே,
விடியும் பொழுதிலே,
யார் முதலிலே,
கூவி அழைப்பவரே
வென்றவராவார் என்றே।

கைகளைக் கோர்த்தனர்,
உறுதி எடுத்தனர்,
படுக்கச் சென்றனர்,
நடக்கப் போவதை அறியாமல்।

காதலி எழுந்தாள்
விடியலை உணர்ந்தள்
வெளியே விரைந்தாள்
காதலைக் கூவ।

அங்கவனைக் கண்டள்
ஆறாமையுடன் நின்றாள்
காதலில் தோற்றல் இல்லையென
ஆனந்தம் கொண்டாள்।

அவனை அணைத்து
கொண்டாட நினைத்தாள்
மென்நடைப் பயின்றாள்
தொட்டணைத்து உருண்டாள்
மகிழ்ச்சியைக் காட்டி।

அவனும் உருண்டான்
அவளுடன் இணைந்து
உயிரற்ற உடலாய்
பனியிலே உறைந்து.

7 comments:

மங்களூர் சிவா said...

அதெப்டிங்க அவன் மட்டும் இறந்து போயிட்டான் அவ உயிரோட இருக்கா!!

குளிர் ரெண்டு பேருக்கும் ஒன்னு தானே!!

வரிகள் சூப்பர்!!

Dhavappudhalvan said...

"மங்களூர் சிவா said...
குளிர் ரெண்டு பேருக்கும் ஒன்னு தானே!!""

ஆமாங்க, ஆனா காதலன் தன் காதலை முதலாக தெரிவித்து வெற்றி பெற நினைத்து, வெகு நேரத்துக்கு முன்பாகவே கடுங்குளிரில் காத்திருந்து, விரைத்து இறந்து விட்டான். அவ்வளவுதாங்க.

மங்களூர் சிவா said...

//
காதலன் தன் காதலை முதலாக தெரிவித்து வெற்றி பெற நினைத்து, வெகு நேரத்துக்கு முன்பாகவே கடுங்குளிரில் காத்திருந்து, விரைத்து இறந்து விட்டான்.
//

வாவ்

இப்படி நான் நினைக்கவே இல்லைங்க!!

இத நீங்க சொன்னதுக்கப்புறம் கவிதை இன்னும் அழகா இருக்கு!

vetha (kovaikkavi) said...

oh!..... sokam.....பனியிலே உறைந்து..
Vetha. Elangathilakam.
Denmark.

தமிழ்த்தோட்டம் said...

நல்லா இருக்கு பாராட்டுக்கள்

Dhavappudhalvan said...

@ kavithai said...
//oh!..... sokam.....பனியிலே உறைந்து..
Vetha. Elangathilakam.
Denmark.//

ஆம் சகோதரி. காதலின் வேகத்தால் ஏற்பட்ட சோகம்ர தான்.

Dhavappudhalvan said...

@ தமிழ்த்தோட்டம் said...
///நல்லா இருக்கு பாராட்டுக்கள்///

நன்றி தங்கள் பாராட்டுதல்களுக்கு. தங்களுடன் இணைந்துக் கொள்ள முயற்சித்தேன், இயலவில்லை.