உன் இளமைக்கோலம்।
*************************
மாறலாம் உன் உருவம்
புற உலகில்।
மாறவே மாறாது
என் மனவுலகில்।
#####1##########
திரும்புவதால்
***************
தேவியின்
தரிசனம்
இன்று
மட்டும்।
###2###
புகைப் படத்தில்
**************
எடுத்துக் கொண்டேன்
புகைப்படம்
சென்ற இடமெல்லாம்।
உன் இடமோ வெறுமை
ஏனெனில்
என் மனத்தில் நீ।
@@@3@@@@@
பார்கிறான்।
**********
வகை வகையாய்
விருந்து
வகையற்றவன்
வாய் திறந்து।
@@@4 @@@
ஏக்கம்
******
சென்றேன் கேரளம்
கண்டேன் யானையை
காணவில்லை குளிப்பதை
ஏக்கம் எனக்குள்ளே।
$$$$$$$$5$$$$$$$$$$$
நீ
^
கண்களில் படாமல்
மறைந்துக் கொண்டாலும்,
மறைய முடியுமா!
என் நினைவுகளிலிருந்து।
$$$$$$$$6 $$$$$$$$$
மகிழ்ச்சி வெள்ளத்தில்
********************
புகைவண்டியும்
உற்ச்சாகமாய்
கூப்பாடு போடுகிறது
உங்களை கண்டதும்।
%%%%%%7%%%%%%%
சிறுவன்
********
ஓடும்
புகைவண்டி
நிழலில்
குதித்து கொண்டிருந்தான்।
பெட்டிகளின்
இணைப்பு
வெளிச்சத்தில்
தடுக்கி விழாமலிருக்க।
%%%%%%%8%%%%%%%
பெறுவேன் வெற்றி
********************
பலரும்
சொற்களை
எதிரொலித்தனர்
அட்டி மலைகளிலே।
நானும்
எதிரொலித்தேன்
என்
மனத்துள்ளே।
++++9+++++
நானே!!
*******
அடைந்தேன்
பித்தம்
உன் மீது
நான்।
ஆனேன்
பைத்தியம்
உன்னால்
நான்।
++++10++++
4 comments:
சூப்பர்!
வாழ்த்துக்கள்!!
கலக்குங்க!!!
சும்மா பிச்சி உதறிட்டீங்க சார்...
இப்படித்தான் நானும் ஒரு தடவை முயற்சி பண்ணேனுங்க... அது புள்ளையார் புடிக்க குரங்கா மாறிடிச்சு....
படிச்சுட்டு சொல்லுங்க
http://ushnavayu.blogspot.com/2007/06/blog-post_05.html
சிவா,பிரதாப் தொடர்ந்து உங்க கருத்துக்களை எழுதுங்க. திறுத்தி வசதியாக இருக்கும்.
பிரதாப், கண்டிப்பா, உங்க blog ஐ வாசிச்சிட்டு எழுதறேங்க.
Post a Comment