அஞ்சலி செய்தி.
நேற்று 12/5/2013 ஞாயிறு இரவு பாண்டிசேரியில் ஐயா அகஸ்ட் மார்சல் அவர்கள், அருகொடை ஆண்டவரின் பொற்பாதங்களில் சரணடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும், அவர் மறைவால் ஈடில்லா துயரத்தில் ஆழ்ந்துள்ள, அன்னாரின் இல்லத்தரசி சந்தன மேரியம்மாள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் மனசாந்தியும், இயல்பான வாழ்வும், தொடர இறைவனை பிரார்த்தித்து எங்கள் ஆழ்ந்த வருத்தங்களையும், இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
*** இரங்கற்பா ***
சந்தனமாய் உம் நினைவுகள்
சந்தன மேரியம்மாள் நினைவலையில்
நிலையாக நிறுத்தி விட்டு,
வாழ்வு நிலையில்லையென
நிலையாக அடைந்தீரோ
ஆண்டவரின் பாதங்களில்.
உம் நினைவும் நீங்காது
ஆண்டவரின் அருள் உள்ளவரை.
அசீர்வதிப்பீர் உம் குடும்பத்தினை,
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
மற்றும் குடும்பத்தினர்.
2 comments:
In current news, it has been reported that U.
My webpage :: best adjustable dumbbells
மிக்க மகிழ்ச்சி தங்கள் கருத்துக்கு, இனிய வாசக நண்பரே!
Post a Comment