மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்வு.
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் வகையில், 1ம் வகுப்பிலிருந்து 5ம் வகுப்பு வரை ரூ 500லிருந்து ரூ.1000மாகவும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.1500லிருந்து ரூ.3000மாகவும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ரூ 2000திலிருந்து ரூ 4000மாகவும், இளங்கலை பட்டபடிப்பு பயில்வோருக்கு 3000லிருந்து 6000மாகவும், பட்டமேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயில்வோருக்கு ரூ.3500லிருந்து ரூ.7000மாகவும் இந்த நடப்பாண்டிளிருந்து இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதன் மூலம் 23,454 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் பயன்பெறுவர்.
இதேபோல பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரின் கல்வியறிவை மென்படுத்தும் வகையில், வாசிப்பாளராக பணியாற்றுபவர்களுக்கு, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ரூ.1,500ம், இளங்கலை பட்டபடிப்புக்கு ரூ.2,500ம், பட்டமேற்படிப்பு மற்றும் தொழிற்கல்விக்கு ரூ.3000ம் என வாசிப்பாளர் உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகை நடப்பாண்டிலிருந்து இருமடங்காக உயர்த்தி வழங்கப்படுமெனவும் அறிவித்துள்ளார்.
சிறப்பு ஸ்கூட்டர்கள்: இருகால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் 400ல் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு முன்னுரிமையிலும், எஞ்சிய ஸ்கூட்டர்கள் பணி புரியும் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்கப்படுகிறது. நடப்பாண்டிளிருந்து பயனாளிகளின் எண்ணிக்கை 1000மாக உயர்த்தபடுவதாக தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்..
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக , 32 நடமாடும் சிகிச்சை பிரிவு நடமாடும் வாகன மருத்துவமனைகள் [நடமாடும் ஹாஸ்பிட்டல்கள் ] துவங்கப்படுமெனவும் அறிவித்துள்ளார்.
**இதுவரை கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரும், தாங்கள் பயிலும் கல்விக்கூடங்கள் மூலமாக விண்ணப்பித்து பயனடையக் கேட்டுக் கொள்கிறோம்.
**சிறப்பு ஸ்கூட்டர்களுக்காக, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.
மேற்கண்ட உத்தரவுகளை பிறப்பித்து மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்திய, மாண்புமிகு தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதுடன் அம்மாணவ மாணவியருக்காக சில வேண்டுகோள்களை பணிவுடன் சமர்பிக்கிறோம். :
1) பட்டயப்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கும் ஊக்கப்படுத்தும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கவும்
2) அஞ்சல்வழி கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கும் ஊக்கப்படுத்தும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கவும் மாண்புமிகு தமிழக முதல்வர் கருத்திலே கொண்டு, இவர்களுக்கும் வழங்க உத்தரவு பிறப்பித்து ஊக்கப்படுத்த வேண்டுமாய் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:
Post a Comment