இன்று இனிய பிறந்த நன்னாளாம்.
இவரை வாழ்த்த வேண்டுமாம் ஆஹா.. ஓஹோ.. என்று.
இலட்சியங்கள் முன்னிற்க, - அதற்கான
இலட்சணங்கள் ஏதுமின்றி,
வருடங்களோ கழிகையிலே
வழுக்கிக் கொண்டு செல்கையிலே,
காற்றிலே கரைகிறதே
காலங்களாம் அது.
ஒன்றுமே இல்லாமலே,
ஓங்குபுகழ் பெருகவென்று,
நகராத நிலையிலே
நலன்கள் பல நிலைக்கவென்று,
வருடங்கள் போன பின்னே,
வாழ்வாங்கு வாழ்கவென்று,
மார்கழிப் பனியைப் போல,
மடை திறந்த வெள்ளம் போல,
வரிசைக் கட்ட வேண்டுமாம்
வாழ்த்துக்களை வைத்துக் கொண்டு.
இன்று உனக்கு பிறந்தநாளாம் தவப்புதல்வனே!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
--
இப்படிக்கு
உன் அண்ணன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
*நண்பர்களே! இன்று தவப்புதல்வனுக்கு பிறந்தநாளாம்.
பாவம், இவரையும் வாழ்த்திவிட்டு போங்கள் பிறந்த நாளுக்கு.
# நண்பர்கள், உனக்கு எத்தனை வாழ்த்தட்டைப் போடுவார்களோ?
நீயே, உனக்கொரு வாழ்த்து இட்டுக் கொள் என்றது மனம்.
# மனம் சொன்னதை தட்டா மாண்புமிகு இவர்.
# சுய பட்சாதாபம், சுயதம்பட்டம். ஹா.. ஹா... ஹா.......
*
சென்ற 7/5/2013 ந் தேதி எமது பிறந்தநாளுக்காக, எமக்கு யாமே வெளியிட்ட வாழ்த்து.
No comments:
Post a Comment