Translate

Sunday, December 26, 2010

என்னச் சொல்ல

*கட்டி வைத்த குளங்களெல்லாம்
காணமல் போகுதம்மா.
கயவர்களின் செயலாலே
கட்டடங்களாய் ஆகுதம்மா.

*கண்டபடி அழிப்பதாலே
வான்மழையும் மறையுதம்மா.
பனிமலைகளும் கரைவதாலே
பாறைகளாய் தெரியுதம்மா.

*பரந்திருந்த பசுமைநிலம்
பாலைவனமாய் மாறுதம்மா.
பாவப்பட்ட மனிதர்களோ
பரிதவித்து நிற்கையிலே,
பாவிமகன் இவன் மட்டும்
புரள்கின்றான் கோடியிலே.

*செலவின்றி கிடைத்த நீரை
செல்லரித்து போக விட்டான்.
செலவழித்து ஊரையவன்
செழிப்பாக்கப் பார்க்கிறான்.

*ஆறிவற்ற செயலாலே
ஆற்றையவன் காக்காமல்,
நன்னீராய் கிடைத்ததை
உப்புக்கடலில் கலக்க விட்டான்.

3 comments:

Anonymous said...

பாவப்பட்ட மனிதர்களோ
பரிதவித்து நிற்கையிலே,
பாவிமகன் இவன் மட்டும்
புரள்கின்றான் கோடியிலே.
இவை மாறினால் எல்லாம் மாறும். அன்புடன் டென்மார்க் வேதா. இலங்காதிலகம்.

Anonymous said...

பாவப்பட்ட மனிதர்களோ
பரிதவித்து நிற்கையிலே,
பாவிமகன் இவன் மட்டும்
புரள்கின்றான் கோடியிலே.
இவை மாறினால் எல்லாம் மாறும். அன்புடன் டென்மார்க் வேதா. இலங்காதிலகம்.

Dhavappudhalvan said...
This comment has been removed by the author.