Translate

Sunday, December 26, 2010

விசமான எண்ணங்கள்.

*வரண்டிருந்த இடங்களெல்லாம்
வளமாக மாறிடவே,
வருங்கால சந்ததியர்
நலமாக வாழ்ந்திடவே

வேறுபாடு நினைக்காமல்
வெட்டினர் குளங்களை
வேட்கை தீர அருந்திடவே.

*விசாலமான எண்ணங்களால் - அன்றே
விவேகமாக கட்டி வைத்தார் குளங்களை.
விசமான எண்ணங்கொண்டு - இன்றோ
செய்கின்றார் கெடுதல்களை.

*குளங்களாய் இருந்த இடம்
குட்டைகளாய் ஆனதே.
நன்னீராய் இருந்ததும்
கழிவுநீராய் போனதே.

* குன்றிருந்த இடங்களையும்
குண்டு வைத்து தகர்கிறான்.
குளம் இருந்த இடங்களையும்
குப்பைப் போட்டு நிரப்புகிறான்.

*காட்டிலிருந்த மரங்களை
கண்டபடி வெட்டுகிறான்.
காட்டுவிலங்கு அத்தனையும்
கண்மூடி அழிக்கிறான்.

*இயற்கையாய் இருப்பதெல்லாம்
இல்லாமல் செய்வதாலே,
செயற்கையாய் படைப்பதெல்லாம்
செயலிழந்து போகுதே ( போகுமே).

No comments: