Translate

Thursday, August 7, 2008

இது ஒரு பக்கம்



பேச்சுக்கு துணை இல்லையென

அழுது தீர்ப்போம்.


ஆறுதல் சொல்ல

அருகினில் வந்தால்,

அவரைப் பிடித்து

கசக்கிப் பிழிவோம்.




ஒப்புக் கென்றே

ஒப்பாறி வைக்க

ஆயிரம் பேர்கள்

அவணியில் உண்டு.




கூட்டு சேர்ந்து

கும்மாளம் அடிக்க

துட்டு- உன்னிடம்

இருந்தால் உண்டு.




காய்ந்த குளமோ

இரையின்றி இருக்க,

பறவைக் கூட்டமோ

பறந்து செல்லும்.




இருக்கும் போது

எல்லாம் தெரியும்.

இல்லாத போதோ

வானம் மட்டும் தெரியும்.




மனம் என்பது

கரைந்து போக,

மானமும் அதிலே

தீய்ந்து போகும்.




மனத்தில் விழுந்த

சூடுகள் எல்லாம்,

கண்களில் தெரியும்

வடுக்களாய் எல்லாம்.




ஏக்கத்தின் பிடியில்

சிக்கித் தவிப்போம்,

ஏனென்று கேட்க

ஆட்களின்றி.




செல்லும் பாதையோ

தவறிச் சென்றால்,

வாழ்வும் விரைவில்

சீரழிந்து போகும்.




ஆக்க பூர்வமாய்

அனுபவத்தில் கண்டவர்,

சொன்ன சொல்லை

செவிமடுத்து கொள்வீர்.

2 comments:

c g balu said...

yes you are perfectly correct.

Dhavappudhalvan said...

Thanks for your comment.