Translate

Monday, June 30, 2008

எங்கள் தாயோ தசலட்சுமி !

எங்கள் பரம்பரையில், ஓர்படியாக-
இவரொரு தனலட்சுமி.

எங்களை ஈன்றெடுத்த
இவர் சந்தானலட்சுமி.

பகிர்துண்ணும் பழக்கத்தை
வளர்த்த தான்யலட்சுமி.

அன்பான அறவணைப்பில்,
ராஜலட்சுமி.

அறிவுக்கண்களை
திறக்க வைத்த வித்யாலட்சுமி.

உடல் பிணியால் மனம்-
தளரா தைரியலட்சுமி.

வாழ்க்கை சாகரத்தை
வென்ற விஜயலட்சுமி.

அனைவரையும் கவர்ந்த
சௌபாக்யலட்சுமி.

எமது தந்தைக்கு அவரே
பாக்யலட்சுமி.

என்றென்றும் எங்கள்
நினைவில் மகாலட்சுமி.

பின்குறிப்பு:::
எங்கள் தாய் இப்புவுலகை விட்டு இறைவனடி அடைந்த சமயத்தில் எழுதிய இக்கவிதையை, அவர் நினைவுநாளில் உங்கள் முன் சமர்பித்திருக்கிறேன்

3 comments:

Anonymous said...

அத்தனை இலட்சுமிகளை இணைத்து அம்மாவைப் பற்றி எழுதியது உங்கள் பாசத்தின் எதிரொலி.
Vetha. Elangathilakam.
Denmark.

Dhavappudhalvan said...

வணக்கம் சகோதரி. நன்றி தங்கள் கருத்துக்கு.

இராசசேகரன் சீ said...

உனக்கொரு தாய் போல் தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ...? எமக்கென உம்மைக் கொடுத்து உம் அன்னை அங்கே சென்றாளோ....?