Translate

Monday, September 15, 2008

அனுப்பாத கடிதம்

நோக்காமல் நோக்கிருந்தேன்.
உம் மணவிழா காணவே நோக்கிருந்தேன்.
இடையிலா இறுமாப்பு
இடையினிலே தோன்றியதால்
கற்பனையில் காணிடவே
கருத்தறிந்து நீ(ங்)க்கி விட்டான்.


மண்ணோடு மண்ணாக
கரையும் உடல் இங்கிருக்க,
ஆவி மட்டும் அலைந்ததுவே
சடங்கிலே கலந்துக் கொள்ள.
கூறு போட்ட மனங்களினால்
குறி வைத்து தாக்கப்பட்(டு) ட,
துடிக்கின்ற உள்ளமோ,
சிந்துகின்ற துளிகள் ஒவ்வொன்றும்
சிதறித்தான் போகிறது. 

கறைகளாய் காய்கிறது.

எது எப்படி இருந்தாலும்
நீங்கா நினைவுகளில்
நிலைத்திருப்பாய்,
நித்தமும் துதித்திருப்போம்
உன் வாழ்வு
துளிர்கட்டுமென்று.
திகட்டாத தேனாய்
வாழ்வே இனிக்கட்டுமென்று
ஆசிகளை அனுப்பி வைத்தோம்
ஆனந்தமே நிலைக்கட்டுமென்று.


அன்புடன்,
மாமா
ஏ.எம்.பத்ரி நாராயணன்
@ தவப்புதல்வன்.