கற்றறிந்ததை நீயாட
தவறின்றி நீயாட
மேடையேறி நீயாட
தயக்கமென்ன நீயாட.
கண்களசைத்து நீயாட
கரங்குவித்து நீயாட
இடைவளைத்து நீயாட
சதி கோர்த்து நீயாட
பாவோலிக்க நீயாட
இசையோடு இசைந்தாட,
தாளமுடன் இணைந்தாட
பரதத்திலும் நீயாட
குச்சிபிடியிலும் நீயாட
கலை பலவற்றில் நீயாட
நிற்காமல் நீயாட
தகுதியுள்ளது நீயாட
பயிற்சி தொடரு நீயாட
பரந்த உலகில் நீயாட
பல இடமிருக்கு நீயாட
பகுத்தறிந்து நீயாட
வரவேற்கும் நீயாட
ஒலியுடன் ஒளியாய் நீயாட
ஒப்பற்ற பேரெடுக்க நீயாட
மனதுக்கு மகிழ்வளிக்க நீயாட
திறனோடு மனமொன்றி நீயாட
தெவிட்டா சுவையுடன் நீயாட
நினைவிலும் நீயாட
கனவிலும் நீயாட
என் படைப்பிலும் நீயாட
தொடர்ந்ததே மனம் தள்ளாட. 💞
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏