வைத்தனர் பந்தயம்
காதலை அறிய।
பனிமலை வெளியிலே,
கடும் குளிரிலே,
விடியும் பொழுதிலே,
யார் முதலிலே,
கூவி அழைப்பவரே
வென்றவராவார் என்றே।
கைகளைக் கோர்த்தனர்,
உறுதி எடுத்தனர்,
படுக்கச் சென்றனர்,
நடக்கப் போவதை அறியாமல்।
காதலி எழுந்தாள்
விடியலை உணர்ந்தள்
வெளியே விரைந்தாள்
காதலைக் கூவ।
அங்கவனைக் கண்டள்
ஆறாமையுடன் நின்றாள்
காதலில் தோற்றல் இல்லையென
ஆனந்தம் கொண்டாள்।
அவனை அணைத்து
கொண்டாட நினைத்தாள்
மென்நடைப் பயின்றாள்
தொட்டணைத்து உருண்டாள்
மகிழ்ச்சியைக் காட்டி।
அவனும் உருண்டான்
அவளுடன் இணைந்து
உயிரற்ற உடலாய்
பனியிலே உறைந்து.