இறைவா............ !!!!!
=================
வெற்றியதை அடையும் போது
துள்ளி நான் குதித்தேன்.
தோல்விதனை உணரும் போது
துவண்டு நான் விழுந்தேன்.
வெற்றியிலே மகிழ்வுமில்லை
தோல்வியிலே வருத்தமில்லை
என்ற நிலை நான்னடைய
பக்குவமான மனத்தினை
தந்து நீ அருள்வாயே !
பகுத்தறிந்து பாடுபட
உள்ளத்திற்கு திறனளித்து
உயர்வடைய
செய்வாயே !!
நித்தம் நித்தம்
துதி செய்து
உன் பாதந்தனில்
பணிந்திருப்பேன் !!!
பனி போல
துன்பந்தனை
நீக்கி எனை
காப்பாயே !!!!!!!
- வாழ்த்துரை வழங்கிய முகநூல் நண்பர்கள்:-
Poovalur Sriji நன்றாக இருக்கிறது!
ஆனாலும் "பகுத்தறிந்து" என்றாலே கடவுளை திட்டுவது என்று இருக்கும்போது, "பகுத்தறிந்து பாடுபட" என்பது "பக்குவம்தெரிந்து" என்று இருக்கலாமோ? !!!February 9 at 7:59pm · · 3 people
வீரபாண்டியன் Veeraபனி போல
துன்பந்தனை
நீக்கி எனை
காப்பாயே !!!!!!!
அருமையான இறைவணக்கம் சார், வாழ்த்துக்கள்.February 9 at 8:10pm · · 1 person
Dhavappudhalvan Badrinarayanan A M @Poovalur Sriji :- " "பகுத்தறிந்து" என்றாலே கடவுளை திட்டுவது என்று இருக்கும்போது, "பகுத்தறிந்து பாடுபட" என்பது "பக்குவம்தெரிந்து" என்று இருக்கலாமோ? !!!" உண்மையிலேயே தற்போதைய சூழ்நிலையில் பல தமிழ்சொற்களின் பொருள் மாற்றி உணர, உணர்த்தபட்டுவிட்டது. பக்குவம் தெரிந்து - இடம், பொருள் தெரிந்து. அருமையான விளக்கம் சகோதரரே. மிக்க மகிழ்ச்சி.February 9 at 8:21pm · · 2 people
Nadarajah Kandaih அற்புதம் .நல்ல நிலத்தில் சரியான நேரத்தில் பெய்த மழை போல உள்ளதுFebruary 9 at 9:24pm · · 3 people
Dhavappudhalvan Badrinarayanan A M @Nadarajah Kandaih :- வணக்கம் சகோதரரே. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் கருத்தறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. இரவு வணக்கம்.February 9 at 9:35pm · · 2 people
ரவி சாரங்கன்ஜெய் ஸ்ரீமன் நாராயணா
//நித்தம் நித்தம்
துதி செய்து
உன் பாதந்தனில்
பணிந்திருப்பேன் !// மாம் ஏகம் சரணம் வ்ரஜா கண்ணன் சொல்கிறான் என் ஒருவணையே சரணடை உன் துண்பங்களை போக்குகிறேன் என்று.
இறைவனை துதித்தால் பக்குவம் ஆறிந்து + பகுத்தறிந்து பாடுபட உள்ளத்திற்கு திறன் வந்திடும்.
அருமை அருமை மிக அருமை தவப்புதல்வன்February 10 at 6:09am · · 1 person
Dhavappudhalvan Badrinarayanan A M @ரவி சாரங்கன்:- வணக்கம் சகோதரரே. ஸ்ரீ ராம்பிரானின் கருணையும், தங்கள் ஆசிகளும் என்றுமே தேவை.February 10 at 6:10pm · · 1 person
Nadarajah Kandaih சரியானதும் யதார்தமான கருத்த்க்களை காணும் போதூஉங்கள்மீதான உறவு பலமடைகின்றது.சரியான்நேரத்தில் பெய்த மழையால் பயிர்தழைத்தோங்குவதுபோல் ப்க்குவமாக கூறி அறிவுறித்தியுள்ளீர். நன்றி February 11 at 8:24pm · · 1 person
Dhavappudhalvan Badrinarayanan A M @Nadarajah Kandaih :- வணக்கம் சகோதரரே. மீண்டும் எமை பாராட்டியமைக்கு மகிழ்வுடன் மீண்டும் நன்றி.February 11 at 8:31pm ·
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா "வெற்றியிலே மகிழ்வுமில்லை
தோல்வியிலே வருத்தமில்லை
என்ற நிலை நான்னடைய
பக்குவமான மனத்தினை
தந்து நீ அருள்வாயே!"5 hours ago · · 2 people
Dhavappudhalvan Badrinarayanan A M @ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா :- வணக்கம். மகிழ்ச்சி நண்பரே, தங்களின் கருத்தியம்பியதற்கு.3 minutes ago ·விருப்பக்குறியிட்ட முகநூல் நண்பர்கள்:-










