Translate

Monday, May 7, 2018

🌸"மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா?!" 🌸




சிறுவராய் அன்றிருந்தோம்
சிந்தனையில் வேற்றுமையின்றி
சிரிப்பினிலும் கள்ளமின்றி
சிறகடித்து நாம் பறந்தோம். 2 \ 9

சீட்டுக்கட்டாய் அத்தனையும் களைந்து விட,
சிறகொடிந்த உருவாக,
சிக்கிக் கொண்டாம் வாழ்வெனும் சிறையினிலே
சிந்திக்கவும் நேரமின்றி. 4 \ 21

சிதைந்து போன உறவாக
சினமில்லா நிலையாக
காலம் பல கடந்த பின்னே
காணுகிறோம் எதிர்பாரா நிலையினிலே 6 \ 33

மொழி உதிக்கும் வழியது
பெருந்தாள் அடைத்திருக்க,
ஏக்கங்களின் சுவாசங்கள்
ஏறியிறங்கும் நெஞ்சுடனே,
புறப்பட்டதே விழிகளின் மௌனமொழி
வாய்மொழியை வார்த்தெடுத்து. 9 \ 47 .

அர்த்தங்களை கணக்கிட
அளவுகோள் எங்கிருக்கு?
இத்தனையென உரைத்திட
இயலுமா நம்மாலும்? 11 \ 55

மொழி மொழியா இத்தருணத்தில்,
ஒலி ஒலிக்கா இந்நிலையில்,, 13
உணர்வுகளில் அர்த்தங்கள்
உணர்த்துகிறது அளவுகளில்லா நிலைப்பாட்டை 14 \ 66
எண்ணியெண்ணி வியக்கின்றேன்
🌸"மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா?!" 🌸 15 \ 71


ஆக்கம்:- ✍️✍️
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.. 🙏



No comments: