Translate

Wednesday, May 16, 2018

கவிதை விழுங்கிய இரவுகள்




அணுவணுவாய் எனை ரசித்தாய்
ஆனந்தத்தில் மிதக்க விட்டாய்.
அத்தனையும் எரிந்து விட்டு
அவன் பின்னே போய் விட்டாய்.

எண்ணங்களின் எதிர்மறையாய்
ஏங்குகின்ற நிலைக் கொடுத்து,
ஏனிப்படி செய்தாயடி?
எனை மறந்து போனாயடி.

கனவிலும் நினைக்காத,
கண்டதெல்லாம் நிசமாக்கி,
கலைத்து விட்டு போனதேனோ?
காதலித்த எனை மறந்ததேனோ?

பண்புக்குப் பெண்டீரென்றும்
பழிக்கு என்றும் ஆண்களெனும்
பாதையை மாற்றி விட்டு
பறந்து நீ போனதேனோ?

மு(னை)ளை முறிக்க முயலாமல்
முகமருகே சுவாசித்தோம்.
முத்தாக உனை நினைத்தேன்
முழுதாக்க வழியின்றி -
முறித்து விட்டாய் நீயாக.

கன்னத்தில் கைப்பதிந்திருக்க,
காற்று இடையிலே புகுந்தோட,
கண் இமைக்க
மறந்திருந்த காலம்
நினைவின்றி போனாயோ?

வரிசைக் கட்டி போகுதடி
வளிய வளிய வந்து பேசி,
வம்புக்கு எனையிழுத்தவளே

என் காதலை முறித்து விட்டு
உன் காதலை புதுப்பிக்க,
வகையாய் துறந்து போனதேனோ?

அங்கும் கானலாக்காமல் நீயிரு.
காத்துக் கொள், அவனுனை கலைக்காமல்.

உன் நினைவே கவிதைகளாய் உருக்கொள்ள,
உறக்கமின்றி விழுங்குகிறதே என் இரவுகளை.




ஆக்கம்:- ✍️✍️
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
🙏🙏

No comments: