எத்தனையோ நினைவுகள்
பதிவிட இருந்தாலும் நினைத்தாலும் சமிப
காலமாக பல காரணங்களால் பதிவுகள் இடுவதில் எம்மால் மனம் ஒன்றமுடியவில்லை,.
இருப்பினும் அவ்வப்போது நண்பர்களின் பதிவுகளுக்கு, எம் மனவழுத்தத்தை
குறைத்துக்கொள்ள, ஒன்றும் நடவாததுபோல் சில கருத்துக்களை பதிவிட்டு வந்தேன்.
‘’இதுவும் கடக்கும். இன்னமும் கடக்கும்’’ என்ற பரந்தாமனின் அருள்வாக்கு நினைவிற்கு
வந்தாலும், அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்னும் எம் மனத்திற்கு வரவில்லை என்பதே
உண்மை.
சில மாதங்களாக, எம்
குடும்ப விளக்கும், குடும்ப பாரத்தை சுமக்கின்ற எனது பாசத்திற்குறிய மனைவியார் முதுகு
தண்டுவட பாதிப்பினால் தாங்கவியலா வலியில் அவதிப்பட்டுக் கொண்டே குடும்ப
பணிகளையாற்றி வருகிறார். நானும் அவருக்கு உதவமுடியாத நிலையில் முதுகு தண்டுவட
பாதிப்புடன் நடக்கவியலா மாற்றுத்திரனாளியாய். இப்படிப்பட்ட எங்கள் நிலையை
புரிந்துக்கொள்ளாமல் நடந்துக் கொள்ளும் சிலரை நினைத்தால், அவர்கள் மீது
பரிதாபம் தான் தோன்றுகிறது.
அது ஒரு பக்கம்
இருக்கட்டும். வாழ்வில் எத்தனையோ நட்புகள் பல விதத்தில் அறிமுகமானது தொடர்வதும்,
துண்டித்து போவதும் அதுவொரு நிகழ்வாய் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. தொடர்கின்ற
மறக்கவியலா சில நட்புகளில் ஒன்று. சென்னை செனாய் நகரில் எங்கள் அண்டை வீட்டில்
வசித்த, டிரக் ஓட்டுனர் திரு.திருநாவுக்கரசு குடும்பம். சொல்லப்போனால் அவர்களின்
வீட்டுக்கு அண்டை வீட்டுக்காரர்களாய் நாங்கள் தான் குடிபெயர்ந்து சென்றோம். நட்பு ஏற்பட்டு சுமார் 20 வருடங்களுக்கு மேலாகிறது.
அதில் ஏற்பட்ட மாற்றங்களை நினைத்தால் விழிகள் விரிகிறது. நாட்கள் செல்ல செல்ல நட்பு
இறுக இறுக, அவர்களின் இரு பக்க குடும்பங்களும் என் மனைவியாரை தங்கள் மகளாகவும்,
எம்மை மருமகனாகவும் உறவு கொண்டாடுவது, நட்பில் கிடைத்த அறிய பேறு.
நாங்கள் சேலம்
குடிபெயர, நண்பர் திரு.திருநாவுக்கரசு பல மாநிலங்களுக்கு செல்லும் டிரக் ஓட்டுனராக
இருப்பதால் சென்னையில் தொடர்ந்து பணிபுரிய, அவர் குடும்பம் உறவுகளுக்கு அருகிலென திருவாருக்கருகில்
குடிபெயர, தினசரி சந்திப்புகள் அற்றுப்போனாலும், குசலங்கள் குறைந்து போனாலும் உறவுகள்
இறுக்கமாகத்தான் தொடர்கிறது. சில நாட்களாக தொடர்பு இல்லையேயென அவர்கள்
அலைப்பேசியில் அளவுலாவியபோது கூட, நண்பரின் வாரிசுகளின் தேர்வுகள் சமயமாதலால், எனது
மனைவியார் தனது முதுகு தண்டுவட பாதிப்பைப் பற்றி, அதிகமாக விவரிக்காமல்
முடித்துக்கொண்டு விட்டார். அதிலிருந்து கணவனும் மனைவியும் தொடர்ந்து அடிக்கடி அலைப்பேசியில் நலன் விசாரித்ததுடன்,
உதவிக்கு வருவது குறித்து பேச, குழந்தைகளின் தேர்வு முடிந்தபின் அனைவரும்
வாருங்கள், நான் நலமாக இருக்கிறேனென தெரிவித்து தடை விதித்து விட்டார்.
நண்பர் பல சமயங்களில்
புதுப்புது அலைப்பேசி எண்களிலிருந்து பேசி எங்களை கலாய்ப்பார். அப்படி சமிபத்தில்
ஒரு புது எண்ணிலிருந்து பேசினார். அவர் கலாய்க்கக் கூடியவர் என்பதால், அவரின் புது
எண்னென கூறியும் சேமிக்காமல் விட்டு
விட்டேன். அதேபோல் சேமிக்காமல் தவற விட்ட மற்றொருவரின் எண்ணிற்கு, மீண்டும் ஒரு
வாரத்திற்குள் பேச நேரிட்டது. தவறுதலாக நண்பரின் எண்ணை தொடர்புக் கொண்டுவிட்டேன்.
வேறொருவருக்கான தவறான
அழைப்புவென நண்பருக்கு தெளிவுபடுத்தி
துண்டித்துவிட்டேன்.
அன்றைய மனநிலையில், மீண்டும் தவறாக அவருடைய எண்ணிற்கே தொடர்புக் கொண்டுவிட்டேன். நண்பருக்கோ வெகு வியப்பு. காரணம், முக்கியம் இருந்தாலொழிய பெரும்பாலும் நான் யாருக்கும் அழைப்பு விடுத்து சிரமம் கொடுக்கமாட்டேன். என் செயல் அவருக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்த, உடனே எங்களை நேரில் பார்த்து நலன் விசாரிக்க புறப்பட சொல்லி அவர் மனைவிக்கு உத்தரவிட, அவர் மனைவியும் உடனே தொடர்புக்கொண்டு, என்ன பிரச்சனை, நாங்கள் சேலம் வருகிறோம் என்றார். எங்களுக்கு விபரம் புரியாமல், தேர்வு முடிந்தபின் வாருங்களென தடுத்தும், சென்னையிலிருந்து நண்பரும், திருவாரூரில் இருந்து தனது தம்பி குடும்பத்துடன் நண்பரின் மனைவியும், திருச்சி காவல்துறையில் பணியாற்றுகின்ற அண்ணனும் ஒரு சேர வந்து எங்கள் கண்களில் ஆனந்த கண்ணீர் துளிர்க்க வைத்து அதிரவைத்தார்கள்.
அன்றைய மனநிலையில், மீண்டும் தவறாக அவருடைய எண்ணிற்கே தொடர்புக் கொண்டுவிட்டேன். நண்பருக்கோ வெகு வியப்பு. காரணம், முக்கியம் இருந்தாலொழிய பெரும்பாலும் நான் யாருக்கும் அழைப்பு விடுத்து சிரமம் கொடுக்கமாட்டேன். என் செயல் அவருக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்த, உடனே எங்களை நேரில் பார்த்து நலன் விசாரிக்க புறப்பட சொல்லி அவர் மனைவிக்கு உத்தரவிட, அவர் மனைவியும் உடனே தொடர்புக்கொண்டு, என்ன பிரச்சனை, நாங்கள் சேலம் வருகிறோம் என்றார். எங்களுக்கு விபரம் புரியாமல், தேர்வு முடிந்தபின் வாருங்களென தடுத்தும், சென்னையிலிருந்து நண்பரும், திருவாரூரில் இருந்து தனது தம்பி குடும்பத்துடன் நண்பரின் மனைவியும், திருச்சி காவல்துறையில் பணியாற்றுகின்ற அண்ணனும் ஒரு சேர வந்து எங்கள் கண்களில் ஆனந்த கண்ணீர் துளிர்க்க வைத்து அதிரவைத்தார்கள்.
வந்தவர்கள் பண உதவி தேவையா? உடனிருந்து உதவட்டுமாவென பல வழிகளில் நலன் விசாரிப்புகளுடன் நெகிழ வைத்துக் கொண்டிருக்க, சில மணி நேரத்தில் திருவாரூரில் இருக்கும் பெரியவர்களிடமிருந்து
அழைப்பு. மருமகனே, எங்கள் மகள் எப்படியிருக்கிறாள்? மகளே எப்படியிருக்கிறாய்?
குடும்பம் எப்படியிருக்கிறது? அடுத்த வாரத்தில் உங்களை சந்திக்க வருகிறோமென தழுதழுக்க,
அந்த அன்பிலே கரைந்தது எங்கள் மனங்கள். நாங்கள் எங்கள் உடல்நிலையை
சீர்படுத்திக்கொண்டு உங்களை சந்திக்க நாங்களே வருகிறோமென சமாதானப்படுத்துவதற்குள்
அப்பப்பா......இருப்பக்க விழிநீரும் சங்கமித்தது அலைப்பேசியிலே.
#இது எப்பிறவியின்
தொடர்போ... ‘எவ்விதத்தில் கைமாறு செலுத்திடுவோம், இறைவா!!!!!!!!!!!!
No comments:
Post a Comment