புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில், குழுக்களாய் சேர்ந்துக் கொண்டு வீதிகளிலும், சாலைகளிலும், பொதுமக்கள் கூடுகின்ற இடங்களிலும் மது அருந்தி விட்டு, மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை சிறிதும் மனத்தில் கொள்ளாமல், மது பாட்டில்களை, பாதைகளில் சூறை விடுவது போல உடைத்து கண்ணாடி சிதறல் சிதறுவதைக் கண்டு கும்மாளமிட்டு குதிப்பதுடன், வயது வித்தியாசம் பார்க்காமல் ஆண்களுடன் பெண்களையும் கேலி செய்து வம்புக்கு இழுப்பதும் சரியான செயலா?
கொண்டாட்டங்கள் அனைவருக்கும் பொதுவானது அல்லவா. மற்றவர்களுக்கு இடஞ்சல் இல்லாத வகையில், உங்கள் கொண்டாட்டம் அமைந்தால், அவர்களும் உங்களுடன் பங்கு பெறலாம். இல்லாவிடின் மகிழ்வுடனாவது செல்வார்கள். சிரம்ம் கொடுப்பதாக அமையுமானால் தூற்றுவதுடன் சாபங்களையும் பெறுவீர்கள். புத்தாண்டு துவக்கத்திலேயே இந்த நிலை உங்களுக்கு தேவையா?
கண்ணாடி சிதறல்களால் காயம் படுபவர் நீரழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவரானால் உயிரிழக்கவும் நேரிடலாம், வாகனங்கள் எதுவாகினும் கண்ணாடி சிதறல்களால் விபத்திற்குள்ளாகும் போது குடும்பங்களே பாதிக்க கூடிய னிலை ஏற்பட்டு விடலாம்.
போதையால் இப்படி நடந்து விட்டது என கூறுபவர்களுக்கு, மனத்தில் படும்படியாகவே ஒன்றைக் கேட்கிறேன். உங்களைப் போலவே ஒரு குழுவோ, தனி நபரோ கொண்டாட்டம் என்ற நினைவில் உங்கள் மனைவியையோ, குழந்தையையோ, சகோதரியையோ, பெற்றெடுத்த தாயையோ கற்பழிப்பு, மானபங்கம், கொலை, வழிபறி, கொள்ளை, ஏதேனும் ஒன்றை செய்து விட்டு போதையில் செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று சொன்னால் விட்டு விடுவீர்களா?
சிந்தியுங்கள் போதையில் இல்லாதபோதே, போதைக்கு ஆட்படாத போதே..
வீட்டில் கொண்டாடுங்கள் உங்கள் குடும்பத்துடனும், நட்புகளுடனும்.
போதையில்லா புத்தாண்டு துவக்கமாய் அமையட்டும்.
சாபமற்று வாழ்த்துக்களாய் அமையட்டும்.
உங்கள் அனவருக்கும் இனிய 2013ம் வருட ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பின் குறிப்பு: இதை வாசிக்கின்ற அனைத்து நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள். உங்கள் முகனூலில் மறுபதிவிட்டு அனைவருக்கும் வேண்டுகோள் விடுங்கள்.
காவல் துறையினருக்கு:- புத்தாண்டு தினம் என்று சலுகை வழங்காமல், திடமாய் செயல்பட்டு அனைவரும் மகிழ்வடைய உதவுங்கள். மது அருந்துவது அவர்களுக்கு மகிழ்வு என்று பணியில் சுணக்கம் காட்டாதீர்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பம், உறவு மற்றும் நட்புகளுக்கும் எங்கள் மனமார்ந்த இனிய 2013ம் வருட ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
தவப்புதல்வன்.
2 comments:
nantru nantru
jeyippom said...
///nantru nantru///
மகிழ்ச்சி மகிழ்ச்சி உம் கருத்துக்கு தான்.
Post a Comment