Translate

Sunday, December 9, 2012

இயற்கையை காத்திடுவீர். இன்பமாய் வாழ்ந்திடுவீர்.


இயற்கையை காத்திடுவீர். இன்பமாய் வாழ்ந்திடுவீர்.


தவமிருந்த காலமெல்லாம்
கனவாய் நெஞ்சில் நிற்குதையா.

தண்ணீரைத் தேடி - என்
கண்களெல்லாம் பூத்ததையா.

மரத்தின் உச்சியிலே
அமர்ந்து நான் பார்கின்றேன்,

எட்டிய தூரமெல்லாம் நீரில்லா
நிலைகளையே காண்கின்றேன்.

மீன் தின்ற காலமெல்லாம்
மீண்டும் என்று வந்திடுமோ!

பசி தீர்க்க, தேடி நான்
புழு தின்று வாழுகிறேன்.

குளம் குட்டை அத்தனையும்
கட்டடங்களாய் மாறி விட்டால்,

குழிநீரில் மீனின்றி - எம்மினமே
குழுக்குழுவாய் அழிந்திடுமே.

குழுவாய் இருந்த குடும்பம் அழிந்து
தனியாய் வேதனையில் வாடுகிறேன்.

பறவை இனம் வாழ்ந்திடவே
உம் மனத்தை நீர் திறந்து வைப்பீரே.

காற்றாய் நாங்கள் உள்நுழைந்து - உமை
கவலையின்றி வாழ வைப்போம்.
 .

No comments: