Translate
Friday, February 25, 2011
கேள்விகள் எதற்கு?
Sunday, February 20, 2011
ஓ நட்சத்திரங்களே!


- நெகிழ்ந்த உள்ளங்களின் கருத்து பகிர்வுகள்:-
- Sylvia Velanganni அருமை தவா சார்...நிலவைக் காட்டிய தாய்
ஏன் மறந்தால் உங்களைக் காட்ட.February 20 at 7:43pm · · 1 person - Sakthi Sakthithasan அன்பின் நண்பரே !
அருமை. வாழ்த்துக்கள்
அன்புடன்
சக்திFebruary 20 at 8:48pm · · 1 person - வீரபாண்டியன் Veera நல்ல கவிதை தவப்புதல்வன் சார் , கற்பனையை மீறி ,உண்மையை கவிதையாய் வடிக்க ஒரு தனிதிறமை வேண்டும் அது உங்களிடம் அளவிட முடியாமல் இருக்கிறது என்று தான் நான் சொல்வேன். வாழ்த்துக்கள், பகிர்வுக்கு நன்றி.February 20 at 9:46pm · · 2 people
- Shanmuga Murthyநினைத்துக்கொள்வேன்
என்றாவது ஒருநாள்....
ஆம்.
அந்த விண்மீன்களில்ஒன்றாய்.February 20 at 10:58pm · · 2 people - Keyem Dharmalingam நண்பரே தவப்புதல்வன் அவர்களே !
அருமைநண்பரே !!
அருமை நண்பரே!!!February 20 at 11:23pm · · 1 person - Sathiabama Sandaran Satia arumai badri sir.. natcathirampol minnugirathu unggal kavi varigal... beautiful!!!February 21 at 7:11am · · 1 person
- Dhavappudhalvan Badrinarayanan A M @ Sylvia Velanganni:- "நிலவைக் காட்டிய தாய்
ஏன் மறந்தால் உங்களைக் காட்ட."
தாயிக்கு நம்மை அறிமுகம் செய்து வைக்க விருப்பமில்லாமல் இருந்திருக்கும். முகநூல் தான் நம்மை அறிமுகம் செய்து வைத்து விட்டதே.February 22 at 8:03pm · · 1 person - Dhavappudhalvan Badrinarayanan A M @ வீரபாண்டியன் Veera:- "உங்களிடம் அளவிட முடியாமல் இருக்கிறது என்று தான் நான் சொல்வேன்."
போச்சிடா! இருப்பதாய் காட்டிக் கொள்ள தோண்ட வேண்டியது தான்.February 22 at 8:06pm · - Dhavappudhalvan Badrinarayanan A M @ Sathiabama Sandaran Satia:- " natcathirampol minnugirathu unggal kavi varigal.''
என்னது நட்சத்திரம் போல என் கவி வரிகள் மின்னுகிறதா? புகைப்படத்தை பார்த்து விட்டு கவி வரிகள்னு சொல்லிட்டிங்களா?. ஆனாலும் சந்தோசம், நீங்க சொன்னதை படிச்சு.February 22 at 8:16pm · - Shanmuganaathan Venkata Kandar Swaminathan தன் வாழ்வில் நட்சத்திரங்களை எண்ணி பார்க்காதவர் யாரேனும் இருக்கின்றனரா?.... அப்படி மல்லாக்க படுத்து எண்ணும் சமயங்களில் புதிது புதிதாய் கண்ணுக்கு தெரிந்து கணக்கை குழப்பும் சிறு நட்சத்திரங்கள். இந்த வின் ஆராய்ச்சி வாழ்வின் ஒரு மிக சிறிய நிகழ்வாக இருந்தாலும் அதை நினைத்து பார்க்க வாய்த்த கவிதை. வாழ்த்துகள் அண்ணா..!February 23 at 8:06pm · · 1 person
- Dhavappudhalvan Badrinarayanan A M @ Shanmuganaathan Venkata Kandar Swaminathan :- தம்பி, முதலிலே ஒன்றை சொல்லி விடுகிறேன். உங்கள் பெயரில் உம்மை அழைக்க எந்த பெயரை எடுத்துக் கொள்வதென்று குளம்பி விட்டேன். அடுத்து இப்பொழுதுள்ள இளையதலைமுறையினர் மிக மிக குறைந்த அளவினர் தான் நட்சத்திரங்களை எண்ணும் வாய்ப்புடையவர்களாக இருப்பார்கள். மற்றவர்களெல்லாம் வீட்டிற்குள் சின்னத்திரைக்கு முன்தான் அடக்கம். இளமைகால நினைவுகளை அசைப்போட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.February 23 at 10:26pm ·
- Shanmuganaathan Venkata Kandar Swaminathan @ Dhavappudhalvan Badrinarayanan A M : Annaa..! You can call me shan..February 23 at 10:59pm ·
- Shanmuganaathan Venkata Kandar Swaminathanஅண்ணா..பலரும் குழம்பும் விஷயம் என்னுடைய பெயர். என்னுடைய பெயர் V .S .SHANMUGANAATHAN . பாட்டனார் வேங்கட ...மற்றும் தகப்பனார் சுவாமிநாதன் முதலியோர்களுடைய பெயர்களை இனிஷியலாக கொண்டுள்ளேன். என்னுடைய ஒன்று விட்ட சகோதரர் எங்களுடைய ஊர் பெயரான நஞ்சை இடையார் என்பதையும் பெயருக்கு முன் கொண்டுள்ளார். 'தில்லு முல்லு' படத்தில் வரும் 'அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்' போலத்தான்.February 23 at 11:09pm · · 1 person
- Dhavappudhalvan Badrinarayanan A Mஹா..ஹா....ஹா..... விளக்கத்துடன் அருமையான ஒப்புவமை. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். இரவு வணக்கம் தம்பி.February 23 at 11:14pm · · 1 personநேசித்த உள்ளங்களின் விருப்பக் குறிகள்:-
Tuesday, February 15, 2011
செல்வம்
Tuesday, February 8, 2011
பேரன் "சுப்ரீத்"க்கு வாழ்த்து

Monday, February 7, 2011
திருமண வாழ்த்து

மணமகள்: சௌ.B.தனலக்ஷ்மி (எ) அர்ச்சனா
மணமகன்: சிர.K.பாலசுபாஷ் குப்தா
மணநாள் : 30-01-2011 ஞாயிற்றுக்கிழமை
இடம்: கோயமுத்தூர்.
அழகான கனவுகளுடன்
ஆனந்த நினைவுகளுடன்
அன்பாகக் கைப்பிடித்து
அத்தானென அழைத்திடவே
ஆவலுடன் காத்திருந்தாய்.
அந்த நினைவு இனிதாக
ஆர்பரிக்கும் நட்பு சூழ,
ஆசி வழங்கும் உறவுக்கிடையே
அவருடன் இணைந்தாய் இன்றே நீ.
அளவாக அழகூட்டி,
அள்ளித்தான் முடித்திருப்பாய்,
அந்தி மயங்கும் வேளையிலே
அவர் வரவை எதிர்நோக்கி.
அவசரக் கோலமின்றி
அறிவான வாரிசுகளை
ஆர்வமாய் ஈன்றெடுத்து
ஆற்றலில் சிறந்திருக்க
அவணியை கைக்கொள்ள
அர்பணிப்பாய் உலகிற்கே.
அனுபவிக்கும் காலமெல்லாம்
அசைப்போடும் நேரமாக
அன்னையவள் அருள் புரிய
அன்னை உம் குலம் செழிக்க
அகண்ட மனமுடனே
ஆசிகள் பல யாம் செய்தோம்
அர்ச்சனா உம் இருவருக்கும் தானே.
மாப்பிள்ளை பெயரெடுக்க
மகிழ்வுடனே மாலையிட்டு
மங்கலயோசை விண்ணதிர,
மனமுவந்து இணையாக
மங்கையிவளை சிறைப் பிடித்தாய்
மயக்கிய மன்னனாய் நீ.
மாசற்ற அன்புடனே
மனையாளை சேர்த்தணைத்து
மங்கையிவளே பாக்கியமென
மற்றோர்க்கு எடுத்துக் காட்டாய்
மாசற்றத் தங்கம் போல்
மகவுகளை வளர்த்தெடுத்து,
மனைவி மக்கள் நலமொன்றே
மங்காத புகழென
மனைமங்கள ஆட்சி செய்து
மாமன்றமதில் செழிப்பாக
மகிழ்வுடனே வாழ்ந்திடவே
மனந்திறந்து வாழ்த்தினோம்
பல்லாண்டு! பல்லாண்டு!!
பலகோடி நூறாண்டு
நலமுடனும் வளமுடனும்
வாழ்கவென.
சௌ.B.அர்ச்சனாவின் சித்தப்பா:-
தவப்புதல்வன் (எ) A.M.பத்ரிநாராயணன்.
Mail Id: dhava.ambi@gmail.com; ambadri_57@yahoo.com