உணர்வுகளோ விழித்துக் கொள்ள,
இதயமோ துடித்துக் கொள்ள,
உணர்வுகளோ ஏங்கி நிற்கும்.
அவன் நினைவாலே
மனமோ மருகி நிற்கும்.
தனிக்கையர் இன்றி
ஒட்டுதல் வெட்டுதல் இல்லா
சிறு சிறு காட்சிகளாய்
விரிந்தோடும் திரைப்படமாய்.
வெண்திரை இல்லை,
படமோட்டும் கருவியுமில்லை,
காணவோ கண்கள்
தேவையில்லை.
மனமோ காட்டும் படமாய்
உணர்வுகளே பார்க்கும் கண்களாய்
விரிந்தவையெல்லாம் இனிக்குமா?
மகிழ்வை மட்டுமே
விரிக்கத் தான் முடியுமா ?
அத்தனை காட்சிகளும்
கலந்துதான் இருந்தாலும்,
ஒன்றுக்கொன்று
தொடர்பு கொண்டு
பிரிந்து தான் நிற்குமே.
உள்ளொன்று வைத்து
புறமொன்று காட்டா,
உள்ளது உள்ளபடியாய்
உணர்வுகள் உணர்ந்ததையே
மனமோ ஏற்றதையே
கண்கட்டு வித்தையின்றி
கண்களை கட்டியே விட்டாலும்,
காட்சிகள் நிற்காமல்
காட்டாற்று வெள்ளம் போல,
கரை புரண்டோடும்.
கணவனாய் நினைத்து,
காதலனாய் வரிந்தேன்.
காணாமல் போய் விட்டான்,
கண்ணை விட்டு மறைந்து விட்டான்.
எனை விட்டு போனாலும்,
என்னுயிர் போகும் வரை,
அவன் நினைவு அகலாது,
அவனையும் தீண்டும்
என் நினைவு.
2 comments:
எனை விட்டு போனாலும்,
என்னுயிர் போகும் வரை,
அவன் நினைவு அகலாது,
இது தான் காதல்.....
Vetha. Elangathilakam.
தங்கள் கருத்துக்கு தாமதமான நன்றி சகோதரி.
Post a Comment