Translate

Tuesday, July 8, 2008

அன்று நீ - இன்று நான்.

நயவஞ்சகமாய்- எனை
வலையிலே வீழ்த்தி,
என் கனியிதழை உறுஞ்சி,
காவியமென கிறுக்கி,
கற்புதனை கவர
நல்லவனாய் நடித்தாய்.

நட்பென தொடங்கி,
நாயகனாய் நினைத்து,
நயமாய் பேசிய - உன்னிடம்
இதழுடன் மனத்தையும் இழந்தேன்.

அச்சாரமென
அதரத்தில் பதித்து ,
அவசரமாய்- என்னுடலை
அடையப் பார்த்தாய் .

உடலோடு உறவாட,
ஊரறிய உறவுதனை
உருவாக்கிய பின்னே,
உனக்கு நான் உரிமையென,
உறுதியாய் நானிருக்க
உதறி விட்டு சென்றாய்,
ஊருறங்கும் நேரமதில்.

உன் வாயிதழோ,
விசக்கொடுக்கு.
இன்று நான்
அறிகின்றேன்.

அன்று ஆசையில்
அலைந்த என் அதரங்களோ,
அமிலத்தில் வீழ்ந்தது போல்,
அரிக்கின்ற அவதியினை
அனுதினமும் உணர்கின்றேன்.


பின் குறிப்பு :::

அன்று எனைப் பற்றி எழுதியதை, காவியமென நினைத்தேன் கயவனே. இன்று உனைப் பற்றி கிழித்திருக்கிறேன், எனக்கு தெரிந்த கிறுக்கல்களால்.

No comments: